பொது செய்தி

இந்தியா

ரூ.200 கோடி மோசடி: சுகேஷ் மீது குற்றப்பத்திரிகை

Added : நவ 15, 2021
Share
Advertisement
புதுடில்லி-'போர்டிஸ் ஹெல்த்கேர்' நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர்கள் ஷிவிந்தர் மற்றும் மல்விந்தர் சிங் குடும்பத்தினரிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீது டில்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.திஹார் சிறைகேரளாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி லீனா பால் ஆகியோர் மீது 32க்கும் மேற்பட்ட மோசடி

புதுடில்லி-'போர்டிஸ் ஹெல்த்கேர்' நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர்கள் ஷிவிந்தர் மற்றும் மல்விந்தர் சிங் குடும்பத்தினரிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீது டில்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

திஹார் சிறைகேரளாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி லீனா பால் ஆகியோர் மீது 32க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ளன. இந்நிலையில், 'போர்டிஸ் ஹெல்த்கேர்' நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர்களும், 'ரான்பாக்சி லேப்' நிறுவனத்தின் உரிமையாளர்களுமான ஷிவிந்தர் சிங், மல்வீந்தர் சிங் ஆகியோர் மோசடி வழக்கில் சிக்கி டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு, 'ஜாமின்' வாங்கி தருவதாக கூறி அவர்களது குடும்பத்தினரிடம், சுகேஷ் சந்திரசேகர் 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.இந்த வழக்கில் சுகேஷ் மீது டில்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதன் விபரம்:ஷிவிந்தர் மற்றும் மல்விந்தர் சிங்கை டில்லி திஹார் சிறையில் சுகேஷ் சந்தித்துஉள்ளார். அவர்களுக்கு ஜாமின் வாங்கி தருவதாக கூறி, பண பறிக்க அப்போது திட்டமிட்டுள்ளார்.தொலைபேசி அழைப்புகளில் மோசடி செய்ய உதவும் சில செயலிகளின் உதவியுடன், ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கை தொடர்பு கொண்டுஉள்ளார்.அவரிடம், மத்திய சட்டத்துறை செயலர் அனுாப் குமார் பேசுவதாக பொய் சொல்லி நம்ப வைத்துஉள்ளார்.

அப்போதைய மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வீடு மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகத்தில் இருந்து பேசுவதாக பல்வேறு அழைப்புகள் வாயிலாக மோசடி செய்து 200 கோடி ரூபாய் பணம் பறித்துள்ளார். ஹவாலா பரிமாற்றம்இந்த பணத்தை கட்சிக்கான நிதி என தெரிவித்துள்ளார்.அவற்றை ஹவாலா வாயிலாக பல்வேறு இடங்களில் முதலீடு செய்துள்ளார். திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 'யுனிடெக்' நிறுவன உரிமையாளர் சஞ்சய் சந்திராவின் உதவியுடன் இந்த ஹவாலா பரிமாற்றம் நடந்துள்ளது.இவ்வாறு குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X