பொது செய்தி

தமிழ்நாடு

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 'இன்சுலின் பம்ப்'

Added : நவ 15, 2021
Share
Advertisement
கோவை:உலக குழந்தைகள் தினம், உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, இதயங்கள் அறக்கட்டளை, ரோட்டரி கிளப் கோவை கேலக்ஸி, கோவை அரசு மருத்துவமனை சார்பில், குழந்தைகளுக்கு இன்சுலின் பம்ப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதயங்கள் அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் பேசுகையில், ''இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு, 100 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் டைப் 1 சர்க்கரைக்கு

கோவை:உலக குழந்தைகள் தினம், உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, இதயங்கள் அறக்கட்டளை, ரோட்டரி கிளப் கோவை கேலக்ஸி, கோவை அரசு மருத்துவமனை சார்பில், குழந்தைகளுக்கு இன்சுலின் பம்ப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதயங்கள் அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் பேசுகையில், ''இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு, 100 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் டைப் 1 சர்க்கரைக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், இன்று அனைத்து மருந்துகளும் கிடைக்கின்றன. அனைத்து குழந்தைகளும், சவால்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு பெற்றோர் தைரியத்தை வழங்க வேண்டும். தன்னம்பிக்கை இருந்தால் எவரெஸ்ட் மலையையும் ஏறலாம்,'' என்றார்.நிகழ்ச்சிக்கு கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தலைமை வகித்தார். குழந்தைகள் நலத்துறை தலைவர் பூமா வரவேற்றார். முன்னதாக டைப் 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நான்கு குழந்தைகளுக்கு, இன்சுலின் பம்ப் வழங்கப்பட்டது.ரோட்டரி மாவட்ட தலைவர், விக்டர் மற்றும் ரோட்டரி கிளப் கோவை கேலக்ஸி மாவட்ட பொது செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X