பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா எண்ணிக்கை உயர்கிறது:உஷாராக இருக்க வேண்டும் மக்களே!

Added : நவ 15, 2021
Share
Advertisement
கோவை;கோவையில் சமீப நாட்களாக கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கூடுதல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு, குறைந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் சுகாதார துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளால், நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.8 முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதனால், பல லட்சம் மக்கள்

கோவை;கோவையில் சமீப நாட்களாக கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கூடுதல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு, குறைந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் சுகாதார துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளால், நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.8 முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதனால், பல லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். இதனால், இரண்டு இலக்க எண்ணிக்கை அளவுக்கு நோய் தொற்று குறைந்தது. சுகாதாரத்துறையினர் சற்று, நிம்மதி அடைந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நோய் தொற்று எண்ணிக்கை, மீண்டும் 100க்கு மேல் அதிகரித்து வருகிறது. மக்களும் பொது இடங்களில் 'மாஸ்க்' அணிதை தவிர்த்து வருகின்றனர்.நோய் பரவலை கட்டுப்படுத்த, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என, சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X