பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் பாதுகாப்புடன் சர்ச் தேர்தல்

Added : நவ 15, 2021
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூர் - அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப்பில், சி.எஸ்.ஐ., துாய பவுல் சர்ச் உள்ளது. இதன் போத சேகர குழு மற்றும் திருமண்டல் பேரவை நிர்வாகிகளை தேர்வு செய்ய மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். கடந்த, 2013க்கு பின் தேர்தல் நடத்தப்படவில்லை.நீதிமன்ற அறிவுறுத்தலை பின்பற்றி, நேற்று நீதிமன்றம் நியமித்த வக்கீல்கள் வெங்கடேஷ், தினகர் ஆகியோர் முன்னிலையில்

திருப்பூர்;திருப்பூர் - அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப்பில், சி.எஸ்.ஐ., துாய பவுல் சர்ச் உள்ளது. இதன் போத சேகர குழு மற்றும் திருமண்டல் பேரவை நிர்வாகிகளை தேர்வு செய்ய மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். கடந்த, 2013க்கு பின் தேர்தல் நடத்தப்படவில்லை.நீதிமன்ற அறிவுறுத்தலை பின்பற்றி, நேற்று நீதிமன்றம் நியமித்த வக்கீல்கள் வெங்கடேஷ், தினகர் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடந்தது. வேட்பாளர் பெயர், வாக்காளர்கள் விபரங்கள் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்தது. தேர்தல் நடந்த நிலையில், ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.உறுப்பினர்களில் ஒருவரான டேவிட், ''வாக்காளர் எண்ணிக்கையில் குளறுபடி உள்ளது. உறுப்பினராக, 1,267 பேர் தான் இருந்தனர். தற்போது, 2,321 பேர் இருப்பதாக தெரிவித்து, அறிவிப்பு ஓட்டியுள்ளனர். இறந்தவர், போலி வாக்காளர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. தகுதியானவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. தேர்தலில் உடன்பாடு இல்லை. என்னை போன்ற பலரும் தேர்தலை புறக்கணித்துள்ளோம்,' என்றார்.இதுதொடர்பான புகாரை சிலர், தேர்தல் நடத்தும் வக்கீல் குழுவினரிடம் வழங்கினர். வக்கீல் குழுவினர் கூறுகையில், ''சர்ச் உறுப்பினர் (வாக்காளர்) விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்பே தேர்தல் நடத்தப்படுகிறது. புகார் இருந்தால் தெரிவிக்கலாம் என கூறியதால், புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு விசாரணையின் போது தெரிவிக்கப்படும்,' என்றனர்.நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி துணைகமிஷனர், இரண்டு இன்ஸ்பெக்டர், நான்கு எஸ்.ஐ., உட்பட, 20க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X