பொது செய்தி

தமிழ்நாடு

'சைக்கிளில் செல்லலாம், வாங்க!'

Added : நவ 15, 2021
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு, மற்றும் அறநெறி அறக்கட்டளை சார்பில், சைக்கிள் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.பல்வேறு நோக்கங்களை வலியுறுத்தி, பல்லடத்தில், நேற்று சைக்கிள் ஊர்வலம் நடந்தது.கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். அவர் கூறுகையில், 'பூமி வெப்பமடைவதை தடுக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம், விபத்தில்லா சமுதாயம்

பல்லடம்:பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு, மற்றும் அறநெறி அறக்கட்டளை சார்பில், சைக்கிள் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.பல்வேறு நோக்கங்களை வலியுறுத்தி, பல்லடத்தில், நேற்று சைக்கிள் ஊர்வலம் நடந்தது.கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். அவர் கூறுகையில், 'பூமி வெப்பமடைவதை தடுக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம், விபத்தில்லா சமுதாயம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தியும், சைக்கிள் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.ஆய்வொன்றில், சைக்கிளில் செல்லும், 45 சதவீதம் பேருக்கு புற்று நோய் வருவதில்லைஎன நிரூபிக்கப்பட்டுள்ளது. பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தில் இருந்து தப்பிக்கவும், காற்று மாசை குறைக்கவும் வேண்டி, சைக்கிள் பயன்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது.பெட்ரோல் விலை உயர்வு காரணமாக, பொருளாதார ரீதியாகவும் சைக்கிள் பயனுள்ளது'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X