பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனை செயல்பாடுகள்: மத்திய அரசின் தர நிர்ணய குழு ஆய்வு

Added : நவ 15, 2021
Share
Advertisement
கூடலுார்:கூடலுார் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து, மத்திய அரசின் தர நிர்ணய குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.தமிழகத்தில், அரசு மருத்துவமனைகளில் செயல்பாடுகள் குறித்து, மத்திய அரசு ஆய்வு செய்து, தேசிய தர நிர்ணய சான்று வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இச்சான்றிதழ் பெறும் அரசு மருத்துவமனைக்கு ஊக்க தொகை மற்றும் இதர வசதிகள் மேற்கொள்ள, மத்திய அரசு

கூடலுார்:கூடலுார் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து, மத்திய அரசின் தர நிர்ணய குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.தமிழகத்தில், அரசு மருத்துவமனைகளில் செயல்பாடுகள் குறித்து, மத்திய அரசு ஆய்வு செய்து, தேசிய தர நிர்ணய சான்று வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இச்சான்றிதழ் பெறும் அரசு மருத்துவமனைக்கு ஊக்க தொகை மற்றும் இதர வசதிகள் மேற்கொள்ள, மத்திய அரசு நேரடியாக நிதி ஒதுக்கி வருகிறது.அதன்படி, நீலகிரி மாவட்டம், கூடலுார் அரசு மருத்துவமனை, இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, குழுவை சேர்ந்த தேசிய மதிப்பீட்டாளர்கள் டாக்டர் நிஷாந்த்குமார் ஜெயிஸ்லால் (உ.பி.,); டாக்டர் மீனா மிட்டல்; டாக்டர் நிமிட்குபாவட் ஆகியோர் மூன்று நாட்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். அதில், நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள், ஊழியர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.அதிகாரிகள் கூறுகையில்,'மத்திய அரசு குழுவினர் ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அதனடிப்படையில், இந்த மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணயச் சான்று கிடைக்கும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X