தேசிய ஸ்னூக்கர் போட்டி :குன்னூர் மாணவர் தகுதி

Added : நவ 15, 2021
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் பள்ளி மாணவர், தேசிய ஸ்னுாக்கர் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.நீலகிரி மாவட்டம், குன்னுார் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளி, 8ம் வகுப்பு மாணவர் ஷாம் ஆல்வின்,13. சென்னையில் கடந்த மாதம், 29ல் நடந்த மாநில போட்டியில், வெற்றிபெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றார். தற்போது குன்னுார் கிளப்பில், தீவிர பயிற்சி பெற்று வருகிறார்.இவரின் தந்தையும்,

குன்னுார்:குன்னுார் பள்ளி மாணவர், தேசிய ஸ்னுாக்கர் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.நீலகிரி மாவட்டம், குன்னுார் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளி, 8ம் வகுப்பு மாணவர் ஷாம் ஆல்வின்,13. சென்னையில் கடந்த மாதம், 29ல் நடந்த மாநில போட்டியில், வெற்றிபெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றார். தற்போது குன்னுார் கிளப்பில், தீவிர பயிற்சி பெற்று வருகிறார்.இவரின் தந்தையும், பயிற்சியாளருமான, குமார் கூறுகையில்,''மாநில அளவில் நடந்த பில்லியார்ட்ஸ், ஸ்னுாக்கர் தகுதி போட்டிகளில், சப்--ஜூனியர் பிரிவில், ஷாம் ஆல்வின் முதலிடம் பெற்றார். சென்னையில், 40 பேர் பங்கேற்ற மாநில போட்டியில், 4வது இடம் பெற்றார். இதனால்,தேசிய போட்டிக்கு தகுதி பெற்றதால், தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.தலைமை பயிற்சியாளர் முரளி கூறுகையில்,'' தேசிய போட்டிக்கு தேர்வான ஷாம் ஆல்வின் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் பங்கு பெறும் தேசிய போட்டி, டிச., 18ல் போபாலில் நடக்க உள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X