பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் சிறப்பு முகாம்; 2வது நாளில் ஆர்வம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
திருப்பூர்:மாவட்டத்தில் இரு நாட்கள் நடந்த வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில், 9,962 பேர் புதிய வாக்காளராக ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர்.தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலை பின்பற்றி, வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நேற்று முன்தினம் துவங்கியது. மாவட்டத்தில் உள்ள, 1,058 மையங்களிலும், 2,512 ஓட்டுச்சாவடிகளிலும் நேற்றும் முகாம் நடந்தது.ஞாயிற்றுக்கிழமை என்பதால், பலரும் முகாம் நடக்கும்

திருப்பூர்:மாவட்டத்தில் இரு நாட்கள் நடந்த வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில், 9,962 பேர் புதிய வாக்காளராக ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர்.தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலை பின்பற்றி, வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நேற்று முன்தினம் துவங்கியது. மாவட்டத்தில் உள்ள, 1,058 மையங்களிலும், 2,512 ஓட்டுச்சாவடிகளிலும் நேற்றும் முகாம் நடந்தது.ஞாயிற்றுக்கிழமை என்பதால், பலரும் முகாம் நடக்கும் ஓட்டுச்சாவடிகளுக்கு ஆர்வமுடன் வந்து பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பாக விண்ணப்பித்தனர்.நேற்று முன்தின நிலவரப்படி, 5,866 பேர் புதிய வாக்காளராக விண்ணப்பித்திருந்தனர். நேற்று, இது, 9,962 ஆக அதிகரித்தது. அதிகபட்சமாக, காங்கயம் தொகுதியில், 1,840 பேர் புதியதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். குறைந்த பட்சமாக தாராபுரத்தில், 744 பேர் புதிய வாக்காளராக விண்ணப்பித்தனர்.திருப்பூர் வடக்கில், 1,642 பேரும், அவிநாசியில், 1,526 பேரும், உடுமலையில், 1199 பேரும், தெற்கில், 1,133 பேரும், காங்கயத்தில், 1086 பேரும், மடத்துக்குளத்தில், 792 பேரும் என மொத்தம், 9,962 பேர் விண்ணப்பித்தனர்.மாவட்டத்தில் பெயர் நீக்க, 1,376 பேர் விண்ணப்பித்தனர் அவிநாசியில் அதிகபட்சமாக, 394 பேரும், குறைந்தபட்சமாக, மடத்துக்குளத்தில், 61 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.முகவரி மாற்றத்துக்கு மாவட்டத்தில், 1,446 பேர் விண்ணப்பித்தனர். அதிகபட்சமாக திருப்பூர் வடக்கில், 428 பேர் முகவரி மாற்றத்துக்கு விண்ணப்பித்தனர். அடுத்த கட்டமாக இம்மாதம், 27, 28 ஆகிய தேதிகளில் மீண்டும் முகாம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X