பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

Added : நவ 15, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், நேற்று நடந்த எட்டாம் கட்ட தடுப்பூசி முகாமில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில் கடந்த அக்., 30ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. தீபாவளி பண்டிகை, தொடர் விடுமுறையால், 15 நாட்களாக முகாம் நடக்கவில்லை. மாவட்டத்தில், 23.21 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியிருந்தனர்.நேற்று எட்டாம் கட்ட தடுப்பூசி முகாம்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், நேற்று நடந்த எட்டாம் கட்ட தடுப்பூசி முகாமில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில் கடந்த அக்., 30ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. தீபாவளி பண்டிகை, தொடர் விடுமுறையால், 15 நாட்களாக முகாம் நடக்கவில்லை. மாவட்டத்தில், 23.21 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியிருந்தனர்.நேற்று எட்டாம் கட்ட தடுப்பூசி முகாம் காலை, 7:00 மணிக்கு துவங்கியது. பல்வேறு துறைகளை சேர்ந்த, 2,968 பேர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிகள், பொது இடங்கள் என, 587 இடங்களில் முகாம் நடந்தது. 80 நடமாடும் குழுக்கள் பல்வேறு பகுதியில் உள்ளவர்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தின.கடந்த இரு வாரங்களாக தடுப்பூசி முகாம் நடக்காத நிலையில், நேற்று நடந்த முகாமுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு குறைவாகவே இருந்தது.நேற்று நடந்த எட்டாம் கட்ட தடுப்பூசி முகாமில், ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில், 50 ஆயிரத்து, 605 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்றிரவு நிலவரப்படி மாவட்டத்தில், 23 லட்சத்து, 81 ஆயிரத்து, 406 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை நடந்த ஏழு தடுப்பூசி முகாமில் அதிகபட்சமாக முதல் முகாமில் ஒரு லட்சத்து, 23 ஆயிரத்து, 163 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.குறைந்தபட்சமாக, அக்., 30ல் நடந்த ஏழாவது மெகா தடுப்பூசி முகாமில், 51 ஆயிரத்து, 811 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்றைய எட்டாவது முகாமில் இதுவரை இல்லாததை விட குறைவாக, 50 ஆயிரத்து, 605 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X