பொது செய்தி

தமிழ்நாடு

உளவியல் ஆலோசனை குழு முடக்கம்! பள்ளிகளில் மீண்டும் செயல்படுமா?

Added : நவ 15, 2021
Share
Advertisement
திருப்பூர்:கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கு இருக்கும் மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வுகாண கடந்த, 2013ல் நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் உருவாக்கப்பட்டது. இதில், கல்வி மாவட்டங்களை இணைத்து, 10 மண்டலங்களில் உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பள்ளிதோறும் மாணவர்களை சந்திப்பது, அவர்களது பிரச்னைகள் பதிவு செய்வது, ஆசிரியர்களுக்கு பயிற்சி எடுப்பது என,

திருப்பூர்:கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கு இருக்கும் மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வுகாண கடந்த, 2013ல் நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் உருவாக்கப்பட்டது. இதில், கல்வி மாவட்டங்களை இணைத்து, 10 மண்டலங்களில் உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பள்ளிதோறும் மாணவர்களை சந்திப்பது, அவர்களது பிரச்னைகள் பதிவு செய்வது, ஆசிரியர்களுக்கு பயிற்சி எடுப்பது என, உளவியல் ஆலோசகர்களுக்கான பணி வரன்முறைகள் நிர்ணயிக்கப்பட்டன. ஈரோடு, திருப்பூர் மாவட்டத்திற்கு ஒரு உளவியல் நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார்.உளவியல் நிபுணர் தலைமையிலான குழு பள்ளிகள் தோறும் மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். கொரோனாவுக்கு பின் இதன் செயல்பாடு கேள்விக்குறியாகியுள்ளது.கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் கல்வியாளர் மூர்த்தி கூறியதாவது:பள்ளிகளில் நடைபெறும் பாலியல் வன்முறை சம்பவங்கள் பல சந்தர்ப்பங்களில் வெளியே தெரிவதில்லை, புகார் கொடுத்தாலும், பள்ளி நிர்வாகங்கள் அந்த புகார்களை முறையாக விசாரிப்பதில்லை.பாலியல் சீண்டல்கள், பருவ மாறுபாடு, உடலியல் சார்ந்த பிரச்னைகள் என, மாணவியர் முன்வைக்கும் பிரச்னைகள் ஏராளம். இப்பாதிப்புகள் குறித்து, பெற்றோர்களிடமும் சொல்ல முடியாமல், நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ள முடியாமல் தவிப்பது, வாக்குமூலத்தின் வாயிலாக அறிய முடிகிறது.சில இடங்களில், பெற்றோர்களது அளவுக்கதிகமான கண்டிப்பால், இடைநிற்றலை தழுவ வேண்டி வருமோ என்ற அச்சத்தில், வெளி வட்டாரங்களில் நடக்கும் பிரச்னைகளை, வீட்டில் பகிர்வது குறைந்து வருகிறது. சில பெற்றோர்களுக்கு, குழந்தைகள் சொல்வதை கேட்ககூட நேரமில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.மீண்டும் வரும்

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறுகையில், ''கொரோனாவுக்கு பின் நடமாடும் உளவியல் ஆலோசனை குழு முடங்கி விட்டது. பள்ளிகள் மீண்டும் செயல்பட துவங்கியது முதல் கடந்த ஒரு மாதமாக , தேசிய மகளிர் ஆணையம், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இணைந்து, பள்ளி, கல்லுாரிகளில் இதுகுறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. உளவியல் ரீதியான ஆலோசனை குழு மீண்டும் செயல்பாட்டுக்கு வரும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X