திருப்பூர்:திருப்பூர் தாராபுரம் ரோடு, விவேகானந்தா பள்ளி எதிரே பாலாஜி நகர் குடியிருப்பு பகுதி உள்ளது. இதையொட்டி கிருஷ்ணா நகர் பகுதி உள்ளது.இப்பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதியாக உள்ள இந்த இரு பகுதிகளிலும் தேவைப்படும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. கழிவு நீர் கால்வாய், தார் ரோடு, தெரு விளக்கு உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை.வீடுகளில் சேகரமாகும் குப்பை கழிவுகள் ரோட்டோரம் கொட்டப்படுகிறது. மழை நாட்களில் மழை நீர் செல்ல வழியின்றி ரோட்டிலும், தாழ்வான பகுதியிலும் தேங்கி நிற்கிறது. தார் ரோடு இல்லாத காரணத்தால் ரோடு சேறும் சகதியுமாக மாறி விடுகிறது.இதனால், வாகனங்கள் செல்வதற்கும், பாதசாரிகளுக்கும் மிகவும் அவதியாக உள்ளது. மழை நாட்களில் இந்த குடியிருப்பு பகுதி முழுவதும் தனித்து விடப்பட்ட தீவாக மாறி விடுகிறது. இப்பகுதிக்கு அடுத்துள்ள பகுதி வரை அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.ஆனால், எங்கள் பகுதிக்கு மட்டும், மாநகராட்சி நிர்வாகம் பாராமுகமாக உள்ளது என, இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE