ஒரு போன் போதுமே... குடிநீர் வீண்

Added : நவ 15, 2021
Share
Advertisement
திருப்பூர் - அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் சிக்னலில் இருந்த ராம்நகர் வரும் வழியில் குழாய் உடைந்து குடிநீர் தொடர்ந்து வீணாகிறது. சரிசெய்ய வேண்டும்.- கார்த்திகேயன், பங்களா ஸ்டாப்.திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. உடைந்துள்ள குழாயை மாற்றி தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.-தேவராஜன், ராயபுரம்.பல்லாங்குழி சாலைதிருப்பூர், லட்சுமி நகர்,

திருப்பூர் - அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் சிக்னலில் இருந்த ராம்நகர் வரும் வழியில் குழாய் உடைந்து குடிநீர் தொடர்ந்து வீணாகிறது. சரிசெய்ய வேண்டும்.- கார்த்திகேயன், பங்களா ஸ்டாப்.திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. உடைந்துள்ள குழாயை மாற்றி தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.-தேவராஜன், ராயபுரம்.பல்லாங்குழி சாலைதிருப்பூர், லட்சுமி நகர், பிரிட்ஜ்வே காலனியில் இருந்து வெங்கடா சலபதி நகர் செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. பாதாள சாக்கடை கால்வாய் பணி முடிந்து பல நாட்களாகிறது. ரோடு போட வேண்டும்.-மகேஸ்வரி, லட்சுமி நகர்.சக்தி தியேட்டர் - யூனியன் மில் ரோடு மேடு பள்ளமாக மோசமான நிலையில் உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.- முருகேஷ், கே.பி.என்., காலனி.குப்பை குவியல்திருப்பூர், வளம் பாலம் சந்திப்பு, செல்லாண்டியம்மன் துறை குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு எதிர்புறம் குப்பை தேங்கியுள்ளது. அள்ளாத குப்பையால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.- பூபாலன், மிஷின் வீதி.குருவாயூரப்பன் நகர், வாய்க்கால் மேடு பகுதியில் கொட்டப்பட்ட குப்பை ஒரு வாரத்துக்கு மேலாகியும் அப்புறப்படுத்தவில்லை குப்பை குவியலாக காணப்படுகிறது.- பானுமதி, குருவாயூரப்பன் நகர்.கவிழும் இருள்திருப்பூர் மாநகராட்சி, 23வது வார்டு, கணேசபுரம் மூன்றாவது வீதியில் தெருவிளக்கு எரிவதில்லை.-ஜோதிமணி, கணேசபுரம்.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் கூட்ஸ்ெஷட் ரவுண்டானாவில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு எரிவதில்லை.- தங்கபாண்டி, திருப்பூர்.பல்லடம் - திருப்பூர் ரோடு, மகாலட்சுமி நகரில் இருந்து அருள்புரம் வரை சாலை நடுவே உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை.- கனகராஜ், அருள்புரம்.திருப்பூர் - பல்லடம் ரோடு, தமிழ்நாடு தியேட்டர் ஸ்டாப் ஆஞ்சநேயர் கோவில் வீதியில் தெருவிளக்கு எரிவதில்லை.- ராம்குமார், பல்லடம் ரோடு.பழைய பஸ் ஸ்டாண்ட் மேம்பாலத்தில் பத்துக்கும் மேற்பட்ட மின்விளக்குகள் எரிவதில்லை.- பாலகிருஷ்ணன், திருப்பூர்.கழிவுநீர் 'குளம்'நல்லாத்துப்பாளையம், இந்திரா நகர் ரோட்டில் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து குளம்போல் தேங்கி கிடக்கிறது. துர்நாற்றம் வீசத் துவங்கியதால் குடியிருப்பு பகுதிக்குள் மக்கள் நடமாட முடியவில்லை.- மாரியப்பன், நல்லாத்துப்பாளையம்.சாமுண்டிபுரம், திருநீலகண்டன் வீதியில் சாக்கடை கால்வாய் இடிந்த நிலையில் காணப்படுகிறது. கழிவுநீர் தேங்கிக்கிடப்பதால் சுற்றுப்புறசூழல் சீர்கேடு அடைந்துள்ளது.- கீதா, சாமுண்டிபுரம்.ஆக்கிரமிப்பால் அவதிஅம்மாபாளையம் செக்போஸ்ட் முதல் ராக்கியாபாளையம் வரையில் ரோட்டில் விளம்பர பலகைகள் பொருத்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.- கணேஷ், அம்மாபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X