உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
கா.மகேஷ், பணகுடி, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: '
அடங்க மாட்றாங்கய்யா' என்ற தலைப்பில், அன்றாடம் குறைந்தது நான்கு அரசு அதிகாரிகளாவது லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்பட்ட செய்தி, நம் நாளிதழில் வெளியாகிறது
.கூட்டி கழித்து கணக்கு பார்த்தால், லஞ்சம் வாங்கியதாக ஆண்டொன்றுக்கு 1,000 அதிகாரிகளாவது கைது செய்யப்படுகின்றனர். ஆனால், தமிழகத்தில் 1 சதவீதம் கூட லஞ்சம் குறைவதே இல்லை. நாளுக்கு நாள் லஞ்சம் அதிகரிக்கிறது என்பது, இன்னும் கொடுமை.அதற்கு முக்கிய காரணம், நம் நாட்டில் தற்போது நடைமுறையில் கடைப்பிடிக்கப்படும் சட்டங்கள் தான்.
நாம், 5வது வயதில் அணிந்த ஆடையை 50வது வயதில் அணிய இயலாது. நம் உடலமைப்புக்கேற்ப, உடையை மாற்றிக் கொள்வோம் தானே?அது போல, நாட்டில் அமலில் இருக்கும் சட்டங்கள் அனைத்தையும், 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தி அமைக்க வேண்டும் அல்லவா?ஆனால் நாமோ, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமலில் இருந்த அரதப் பழசான சட்டங்களையே இன்னமும் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம்.நடைமுறையில் இருக்கும் சட்டங்களின் மூலம் லஞ்ச, -ஊழல் வழக்குகளில் சிக்குவோரை தண்டிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. தவிர நம் நீதிமன்றங்கள் கடைப்பிடிக்கும் நடைமுறைகள் பெரும்பாலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாகவே உள்ளன.

லஞ்ச, -ஊழலில் கையும் களவுமாக பிடிபடுபவர், நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு, தண்டனை அளிப்பதற்குள் அவரின் ஆயுளே முடிந்து விடுகிறது.லஞ்ச, -ஊழல் வழக்கில் கைது செய்யப்படுபவர் யாராவது தலை குனிந்தபடி செல்கிறாரா?வெற்றிக் களிப்போடு, வெற்றிச் சின்னமாக இரண்டு விரல்களை காட்டியபடி, 'சட்டத்தால் என்னை ஒன்றும் செய்ய முடியாது' என்ற மமதையோடு செல்கிறார்.இன்றைக்கு இருக்கும் சட்டத்தால், நாட்டில் நீக்கமற நிறைந்து இருக்கும் லஞ்சம், ஊழலை ஒழிக்கவே முடியாது.
சரி... அப்படியென்றால் அதை எப்படி ஒழிப்பது?மன்னர் ஆட்சி காலத்தில், 'கழுமரம்' என்ற பெயரில் ஒரு தண்டனை கருவி இருந்தது தெரியுமா?தற்போது கையும் களவுமான லஞ்சம், ஊழலில் சிக்கும் 10 நபர்களை உடனடியாக கழுமரத்தில் ஏற்றினால் போதும்... இந்நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழல் என்ற வார்த்தைகள், அகராதியில் கூட இருக்காது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE