தமிழ்நாடு

அம்பத்துார் தொழிற்பேட்டை மழை வெள்ளத்தால் பாதிப்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
அம்பத்துார் : -ஐந்து நாட்களுக்கும் மேலாக நீடித்த பலத்த மழை வெள்ளத்தால், அம்பத்துார் தொழிற்பேட்டை பாதிக்கப்பட்டுள்ளது.சென்னை அம்பத்துார் தொழிற்பேட்டையில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என, 2,500க்கும் அதிக தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு, மூன்று பிரதான சாலை மற்றும் 30க்கும் மேற்பட்ட குறுக்கு சாலைகள் உள்ளன. சமீப நாட்களாக பெய்த கன மழையால்,

அம்பத்துார் : -ஐந்து நாட்களுக்கும் மேலாக நீடித்த பலத்த மழை வெள்ளத்தால், அம்பத்துார் தொழிற்பேட்டை பாதிக்கப்பட்டுள்ளது.சென்னை அம்பத்துார் தொழிற்பேட்டையில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என, 2,500க்கும் அதிக தொழிற்சாலைகள் உள்ளன.

இங்கு, மூன்று பிரதான சாலை மற்றும் 30க்கும் மேற்பட்ட குறுக்கு சாலைகள் உள்ளன. சமீப நாட்களாக பெய்த கன மழையால், தொழிற்பேட்டையில் 2 அடி ஆழத்திற்கு மழை மற்றும் கழிவு நீர் தேங்கியது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள பல நிறுவனங்கள் மூடப்பட்டன. அவற்றில் பணியாற்றிய, ௧௦௦க்கும் அதிகமான தொழிலாளர்கள், தற்போது வேலை இழந்துள்ளனர்.

சாலைகளும் கடும் சேதமடைந்துள்ளன. மழை நீர் வடிகால்கள் இருந்தும், பராமரிப்பின்மை மற்றும் ஆக்கிரமிப்புகள் காரணமாக, வெள்ளம் சூழ்ந்தது.தொழிற்பேட்டை தனியார் கூட்டமைப்பு கட்டுப்பாட்டில் உள்ளதால், அதன் அனுமதியின்றி மீட்பு பணிகளை செய்ய முடியாது என, அம்பத்துார் மண்டல அதிகாரிகள் கூறினர்.அதனால், பாதிக்கப்பட்ட தொழிற்சாலை உரிமையாளர்களே, தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X