பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சியில் குப்பை சேகரிக்கும் இட

Added : நவ 15, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் நகராட்சியில் பிரச்னைக்குரிய, குப்பை சேகரிக்கும் இடத்தை ஆர்.டி.ஓ., ஆய்வு செய்தார்.நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஆய்வு செய்த மண்டல நிர்வாக இயக்குனர் சரவணன், சாலைகளில் குப்பை தேங்கியிருப்பதை பார்த்து காரணத்தை கேட்டார். மேல்பாதியில் குப்பை சேகரிக்குமிடத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் இடமில்லை என அதிகாரிகள் கூறினர். அவர்

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் நகராட்சியில் பிரச்னைக்குரிய, குப்பை சேகரிக்கும் இடத்தை ஆர்.டி.ஓ., ஆய்வு செய்தார்.நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஆய்வு செய்த மண்டல நிர்வாக இயக்குனர் சரவணன், சாலைகளில் குப்பை தேங்கியிருப்பதை பார்த்து காரணத்தை கேட்டார்.

மேல்பாதியில் குப்பை சேகரிக்குமிடத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் இடமில்லை என அதிகாரிகள் கூறினர். அவர் கேட்டு கொண்டதையடுத்து மேல்பாதியில் பிரச்னைக்குரிய குப்பை சேகரிக்குமிடத்தை நேற்று ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு ஆய்வு செய்தார். பல முறை சமாதான கூட்டம் நடத்தியும் அப்பகுதி மக்கள் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவிப்பதாக நகராட்சி அதிகாரிகள் கூறினர். கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ., கூறினார். பிறகு வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நடக்குமிடங்களையும் ஆர்.டி.ஓ., ஆய்வு செய்து பணிகளை முறையாக செய்ய உத்தரவிட்டார். நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி, துப்புரவு அலுவலர் சக்திவேல், பணி மேற்பார்வையாளர் வாசு உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X