மெட்ரோ நிலையத்தில் உலா வரும் நாய்கள்| Dinamalar

'மெட்ரோ' நிலையத்தில் உலா வரும் நாய்கள்

Added : நவ 15, 2021
Share
சென்னை : வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில், நாய்கள் உலா வருவது அதிகரித்து உள்ளது.சென்னை விமான நிலையம் - விம்கோ நகர், பரங்கிமலை - எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் இடையே, மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. நிலைய நுழைவு வாயில்கள், கண்காணிப்பு கேமரா வாயிலாக நிலைய அதிகாரியால் கண்காணிக்கப்படுகின்றன.ஆனால், பாதுகாப்புக்கு ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், பயணியர் அல்லாதோர் நுழைவு
 'மெட்ரோ' நிலையத்தில் உலா வரும் நாய்கள்

சென்னை : வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில், நாய்கள் உலா வருவது அதிகரித்து உள்ளது.சென்னை விமான நிலையம் - விம்கோ நகர், பரங்கிமலை - எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் இடையே, மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

நிலைய நுழைவு வாயில்கள், கண்காணிப்பு கேமரா வாயிலாக நிலைய அதிகாரியால் கண்காணிக்கப்படுகின்றன.ஆனால், பாதுகாப்புக்கு ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், பயணியர் அல்லாதோர் நுழைவு வாயில்களில் அமர்வது மற்றும் நாய்கள் உலா வருவதும் தொடர்கிறது.சமீபத்தில் பெய்த பலத்த மழையால், பாதுகாப்பிற்காக தஞ்சம் புகுந்த நாய்கள், தற்போது அப்பகுதியில் முகாமிட்டுள்ளன.எனவே, நாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X