ரூ.4.5 கோடியில் சீரமைத்த மாநகராட்சி குளம் சேதம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
அம்பத்துா : நான்கு கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மாநகராட்சி குளம், மழையால் சேதமடைந்தது.சென்னை அம்பத்துார் மண்டலம், 79வது வார்டு ஒரகடம் கணபதி நகரில், 6 ஏக்கர் பரப்பளவில் தாமரை குளம் உள்ளது. இந்த குளம், மாநகராட்சி வாயிலாக கடந்தாண்டு, 4.5 கோடி ரூபாய் செலவில் துார் வாரப்பட்டு, நடை பாதையுடன் கரைகள் அமைத்து மேம்படுத்தப்பட்டது.சமீபத்திய மழையால் இந்த குளம் நிரம்பி விடும்
 ரூ.4.5 கோடியில் சீரமைத்த மாநகராட்சி குளம் சேதம்

அம்பத்துா : நான்கு கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மாநகராட்சி குளம், மழையால் சேதமடைந்தது.சென்னை அம்பத்துார் மண்டலம், 79வது வார்டு ஒரகடம் கணபதி நகரில், 6 ஏக்கர் பரப்பளவில் தாமரை குளம் உள்ளது.

இந்த குளம், மாநகராட்சி வாயிலாக கடந்தாண்டு, 4.5 கோடி ரூபாய் செலவில் துார் வாரப்பட்டு, நடை பாதையுடன் கரைகள் அமைத்து மேம்படுத்தப்பட்டது.சமீபத்திய மழையால் இந்த குளம் நிரம்பி விடும் என, பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், குளம் நேற்று வரை நிரம்பவில்லை. இந்த குளத்திற்கான நீர் வரத்து கால்வாய்கள், தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன.

மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், அவசர கோலத்தில் குளத்தை ஒப்பனை செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். அதனால், கடந்த இரு தினங்களாக நீடித்த மழையின் வேகத்தை தாங்காமல், குளத்தின் ஒரு பகுதி கரை சேதமடைந்து, கரைந்து குளத்திற்குள் விழுந்துள்ளது.இதனால், மண்ணின் தன்மை, குளத்தின் ஆழம் உள்ளிட்டவற்றை பொறியாளர் வாயிலாக ஆய்வு செய்து கரை அமைக்காமல், அவசர கதியில் மண்ணை நிரப்பி கரை அமைத்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X