சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் வராததை கண்டித்து மக்கள் சாலை மறியல்

Added : நவ 15, 2021
Share
Advertisement
சிதம்பரம் : சிதம்பரத்தில் குடிநீர் கிடைக்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் நகராட்சி, வண்டிகேட் பகுதியில் பி.எஸ்.என்.எல்., அலுவலர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் பழுதான மோட்டார் சரி செய்யாததால் குடிநீர் இல்லாமல் தவித்தனர். பலமுறை அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.நேற்று காலை சிதம்பரம் -

சிதம்பரம் : சிதம்பரத்தில் குடிநீர் கிடைக்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் நகராட்சி, வண்டிகேட் பகுதியில் பி.எஸ்.என்.எல்., அலுவலர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் பழுதான மோட்டார் சரி செய்யாததால் குடிநீர் இல்லாமல் தவித்தனர். பலமுறை அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.நேற்று காலை சிதம்பரம் - கடலுார் சாலை வண்டிகேட்டில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி தண்ணீர் வசதி உடனடியாக செய்து தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X