டீக்கடையில் ரூ.60,000 ஆட்டை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டீக்கடையில் ரூ.60,000 'ஆட்டை'

Added : நவ 15, 2021
Share
பெரியமேடு : டீக்கடையின் பூட்டை உடைத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை, மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் இஸ்மாயில், 26. இவர், சூளை நெடுஞ்சாலையில் டீக்கடை வைத்துள்ளார். கடந்த 1ம் தேதி இரவு, கடையை பூட்டி சொந்த ஊரான பட்டுக்கோட்டைக்கு சென்றார்.நேற்று முன்தினம் இரவு கடையை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி

பெரியமேடு : டீக்கடையின் பூட்டை உடைத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை, மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் இஸ்மாயில், 26. இவர், சூளை நெடுஞ்சாலையில் டீக்கடை வைத்துள்ளார். கடந்த 1ம் தேதி இரவு, கடையை பூட்டி சொந்த ஊரான பட்டுக்கோட்டைக்கு சென்றார்.நேற்று முன்தினம் இரவு கடையை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை, மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.இது குறித்து, பெரியமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X