கடலுார் : கடலுார் கந்தசாமி நாயுடு கல்லுாரி வளாகத்தில் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.கடலுார் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகளாக பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தலுக்கான சிறப்பு முகாம் இரு தினங்களாக நடக்கிறது.
கந்தசாமி நாயுடு கல்லுாரி வளாகத்தில் உள்ள ஓட்டுச் சாவடியில் நடக்கும் சிறப்பு முகாமை கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார். கடலுார் மாவட்டத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட 2301 ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் இரு நாட்கள் நடந்தது. 13ம் தேதி நடந்த சிறப்பு முகாமில் 8409 வாக்காளர் பெயர் சேர்த்தலுக்கான மனுக்கள், 1207 பெயர் நீக்கலுக்கான மனுக்கள், 1364 பெயர் திருத்தத்திற்கான மனுக்கள் உட்பட 10 ஆயிரத்து 980 மனுக்கள் பெறப்பட்டன. நேற்று கந்தசாமி நாயுடு கல்லுாரி வளாக ஓட்டுச்சாவடியில் நடந்த சிறப்பு முகாமை கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார்.
ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு, தேர்தல் தாசில்தார் பாலமுருகன், தாசில்தார் பலராமன், மாநகராட்சி கமிஷனர் (பொ) அரவிந்த்ஜோதி உட்பட பலர் உடனிருந்தனர்.