பொது செய்தி

தமிழ்நாடு

முடிச்சூர் பாதிப்புக்கு காரணம் என்ன?

Added : நவ 15, 2021
Share
Advertisement
தாம்பரம் : முடிச்சூர் ஊராட்சியில் வெள்ளம் பாதிக்க, மழை நீர் வடிகால்கள் அமைக்கப்படாததே காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கன மழையால் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மணிமங்கலம், வண்டலுார் பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி அதன், உபரி நீர் அடையாறு ஆற்றில் சென்றது.இதனால், முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட அமுதம் நகர், மதனபுரம் பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளது. முறையான மழை

தாம்பரம் : முடிச்சூர் ஊராட்சியில் வெள்ளம் பாதிக்க, மழை நீர் வடிகால்கள் அமைக்கப்படாததே காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கன மழையால் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மணிமங்கலம், வண்டலுார் பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி அதன், உபரி நீர் அடையாறு ஆற்றில் சென்றது.இதனால், முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட அமுதம் நகர், மதனபுரம் பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளது. முறையான மழை நீர் வடிகால்கள் அமைக்கப்படாததே, இதற்கு காரணம் என புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:கடந்த 2015 மழை பாதிப்பிற்கு பின், ஐ.ஏ.எஸ்., அமுதா இங்கு ஆய்வு செய்த போது, மழை நீர் வடிகால்களும், வண்டலுார்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை அணுகு சாலையோரம், அடையாறு ஆறு நோக்கிச் செல்லும் கால்வாய் மீது, 'கட் அண்ட் கவர்' கால்வாயும் அமைக்க கோரினோம். ஆனால், இன்று வரை பணிகள் நடக்கவில்லை; இதனால், இந்தாண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இனியும் பணிகள் மேற்கொள்ளப்படாவிட்டால், அடுத்த மழைக்கும் இந்த அவலம் தொடரும். நாளடைவில், இந்தப் பகுதி, மக்கள் வாழத்தகுதி அற்றதாக மாறிவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X