8 வது மெகா தடுப்பூசி முகாம்; | Dinamalar

8 வது மெகா தடுப்பூசி முகாம்;

Added : நவ 15, 2021 | |
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 லட்சத்து 20 ஆயிரத்து 807 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்று நடந்த 8 வது மெகா தடுப்பூசி முகாமில் 94 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 20க்கும் கீழ் உள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 லட்சத்து 20 ஆயிரத்து 807 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நேற்று நடந்த 8 வது மெகா தடுப்பூசி முகாமில் 94 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 20க்கும் கீழ் உள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு 64 ஆயிரத்து 272 ஆக உள்ளது. 63 ஆயிரத்து 244 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று முன்தினம் வரை 870 பேர் இறந்துள்ளனர். 158 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதற்காக கொரோனா தடுப்பூசி முகாம்கள் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்படுகிறது. நேற்று மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 8 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்தன. 75 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடலுார் மாவட்டம் முழுவதும் 85 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடந்தது.

மாவட்டத்தில் நேற்று வரை 24 லட்சத்து 20 ஆயிரத்து 807 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 94 ஆயிரத்து ௭௧௦ பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். கடலுார் மாவட்டத்தில் முதல் டோஸ் 16 லட்சத்து 32 ஆயிரத்து 153 பேருக்கும், இரண்டாவது டோஸ் 7 லட்சத்து 88 ஆயிரத்து 654 பேருக்கும் செலுத்தப்பட்டது. ஆண்கள் 11 லட்சத்து 66 ஆயிரத்து 648 பேர், பெண்கள் 12 லட்சத்து 53 ஆயிரத்து 732 பேர், இதரர் 427 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

இதில், 21 லட்சத்து 52 ஆயிரத்து 524 பேர் கோவிஷீல்டு, 2 லட்சத்து 63 ஆயிரத்து 514 பேர் கோவாக்சின், 4 ஆயிரத்து 769 பேர் ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதில், 18 முதல் 45 வயது வரை 14 லட்சத்து 54 ஆயிரத்து 316 பேர், 45 முதல் 60 வயது வரை 6 லட்சத்து 39 ஆயிரத்து 972 பேர், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 3 லட்சத்து 26 ஆயிரத்து 519 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

இது வரை அதிகபட்சமாக கிருஷ்ணாபுரத்தில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 531 பேருக்கும், விருத்தாசலத்தில் 72 ஆயிரத்து 395 பேருக்கும், நெய்வேலியில் 61 ஆயிரத்து 712 பேருக்கும், புதுச்சத்திரத்தில் 59 ஆயிரத்து 275 பேருக்கும், வடலுாரில் 54 ஆயிரத்து 713 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X