பொது செய்தி

தமிழ்நாடு

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விமானங்களுக்கு பாலாலயம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், பஞ்சமூர்த்திகள் விமானங்களுக்கு இன்று பாலாலயம் நடக்கிறது.விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு, விரைவில் கும்பாபிேஷகம் நடக்க உள்ளது. இதற்காக கோபுரங்கள், சுவாமி சன்னதிகள், கொடிமரங்கள், தரைத்தளம், சுற்றுச்சுவர் புதுப்பிப்பு மற்றும் சீரமைப்பு
 விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விமானங்களுக்கு பாலாலயம்

விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், பஞ்சமூர்த்திகள் விமானங்களுக்கு இன்று பாலாலயம் நடக்கிறது.

விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு, விரைவில் கும்பாபிேஷகம் நடக்க உள்ளது. இதற்காக கோபுரங்கள், சுவாமி சன்னதிகள், கொடிமரங்கள், தரைத்தளம், சுற்றுச்சுவர் புதுப்பிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் விமானங்களுக்கு, இன்று காலை 6:00 மணிக்கு மேல், 7:15 மணிக்குள் பாலாலயம் நடக்கிறது.

இதற்காக, நேற்று மாலை 4:00 மணியளவில் முதல்கால யாக பூஜை நடந்தது. பெரியநாயகர் சன்னதியில் புனிதநீர் கலசங்கள் வைத்து, சிவாச்சாரியார்கள் இணைந்து சிறப்பு யாகம் நடத்தினர். இன்று காலை இரண்டாம் கால பூஜையுடன், பஞ்சமூர்த்திகள் விமானங்களுக்கு பாலாலயம் நடக்கிறது. செயல் அலுவலர் முத்துராஜா, திருப்பணிக்கமிட்டி தலைவர் அகர் சந்த், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X