ரவுடிகளின் வீடுகளில் அதிகாலையில் திடீர் சோதனை: 17 பேர் அதிரடி கைது

Added : நவ 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் அதிகாலையில் நடந்த 'ஆபரேஷன் திரிசூல்' ஆய்வில், 17 ரவுடிகள் கைது செய்யப் பட்டனர்.புதுச்சேரி, வாரணப்பேட்டையில் ரவுடி பாம் ரவி, அந்தோணி இருவர் வெடிகுண்டு வீசி, வெட்டி கொலை செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து, பாம் ரவி தரப்பினர், எதிர் தரப்பினரை கொலை செய்ய திட்டமிட்டனர். ரவுடிகள் மோதிக் கொள்வதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை தலை துாக்க
 ரவுடிகளின் வீடுகளில் அதிகாலையில் திடீர் சோதனை: 17 பேர் அதிரடி கைது

புதுச்சேரி : புதுச்சேரியில் அதிகாலையில் நடந்த 'ஆபரேஷன் திரிசூல்' ஆய்வில், 17 ரவுடிகள் கைது செய்யப் பட்டனர்.புதுச்சேரி, வாரணப்பேட்டையில் ரவுடி பாம் ரவி, அந்தோணி இருவர் வெடிகுண்டு வீசி, வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

அதை தொடர்ந்து, பாம் ரவி தரப்பினர், எதிர் தரப்பினரை கொலை செய்ய திட்டமிட்டனர். ரவுடிகள் மோதிக் கொள்வதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை தலை துாக்க துவங்கியது.இதையடுத்து, ரவுடிகளை கண்காணிக்க, சீனியர் எஸ்.பி., லோகேஸ்வரன் தலைமையில் 'ஆபரேஷன் திரிசூல்' அமைக்கப்பட்டது. ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனை செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்யும் பணியில் போலீசார் இறங்கினர்.

கடந்த 30ம் தேதி வாணரப்பேட்டை, ரோடியர்பேட் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை நேரத்தில் போலீசார் ரவுடி களின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தி, 14 பேரை கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, கருவடிக்குப்பம் மற்றும் கரிக்கலாம்பாக்கம் ஆகிய இரண்டு இடங்களில் போலீசார் திடீர் சோதனையில் இறங்கினர்.சீனியர் எஸ்.பி., லோகேஸ்வரன், எஸ்.பி.,க்கள் ஜிந்தா கோதண்டராமன், சுபம்கோஷ், தீபிகா தலைமையில், சிறப்பு அதிரடிப்படை, சட்டம் ஒழுங்கு போலீசார் கருவடிக்குப்பம், சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனையில் இறங்கினர்.

எஸ்.பி.,க்கள் ரங்கநாதன், விஷ்ணு தலைமையிலான குழுவினர், கரிக்கலாம்பாக்கம் பகுதியில், மோப்ப நாய் உதவியுடன் ரவுடிகளின் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் குழுவும் சோதனையில் பங்கேற்றனர்.இரு இடங்களில், ரவுடிகள் உட்பட அடிதடி வழக்கில் உள்ள 91 பேர் வீடுகளில் சோதனை நடந்தது. இதில், 33 பேர் வீடுகளில் இருந்தனர். சிலர் சிறையிலும், சிலர் தலைமறைவாக இருந்தனர்.

கரிக்கலாம்பாக்கத்தில் 12 பேர், கருவடிக்குப்பத்தில் 5 பேரை சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திடீர் அறிவிப்புநேற்று அதிகாலை 4:00 மணிக்கு, சட்டம் ஒழுங்கு மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் அதிகாரிகள், உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.போலீசார் வந்த பின்பு, கருவடிக்குப்பம் மற்றும் கரிக்கலாம்பாக்கத்தில் சோதனை நடத்த வேண்டும் என, சீனியர் எஸ்.பி. லோகேஸ்வரன் அறிவித்தார். அதன்பின்பே, போலீசார் இரு இடங்களுக்கும் சென்று தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
21-நவ-202104:41:32 IST Report Abuse
meenakshisundaram தமிழகத்தில் காவல் துறை இப்படி ஒரு ரவுண்டு வரட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X