பொது செய்தி

தமிழ்நாடு

350 மனை பிரிவுகளுக்கு தொழில்நுட்ப ஒப்புதல்

Added : நவ 15, 2021
Share
Advertisement
சென்னை : சி.எம்.டி.ஏ.,வில் கடந்த 10 மாதங்களில், 350 மனைப்பிரிவுகளுக்கு தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது. இதில் பெறப்படும் விண்ணப்பங்களை ஆராய்ந்து, 'பிரேம் ஒர்க்' எனப்படும் தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கும் பொறுப்பு சி.எம்.டி.ஏ.,வுக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதன்படி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான

சென்னை : சி.எம்.டி.ஏ.,வில் கடந்த 10 மாதங்களில், 350 மனைப்பிரிவுகளுக்கு தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது.

இதில் பெறப்படும் விண்ணப்பங்களை ஆராய்ந்து, 'பிரேம் ஒர்க்' எனப்படும் தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கும் பொறுப்பு சி.எம்.டி.ஏ.,வுக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதன்படி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், மனைப்பிரிவுகளுக்கு தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்டுகிறது. இதில், 2020 டிசம்பர் வரையிலான காலத்தில், 5,416 பேருக்கு தொழில்நுட்ப ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நடப்பாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, 350 மனைப் பிரிவுகளுக்கு தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளில் வரன்முறைக்கான இறுதி உத்தரவுகளை பெறலாம் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X