தமிழ்நாடு

தொடர் மின் தடை, மழைநீர் தேக்கம் போராட்ட களமானது திரு.வி.க., நகர்

Added : நவ 15, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புளியந்தோப்பு : திரு.வி.க., நகரில் தொடர் மின் தடை, குடிநீருடன் கழிவு நீர் கலப்பு, மழைநீர் தேக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 10க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி போராட்டக்களமாக மாறியது.சமீபத்தில் கொட்டி தீர்த்த கன மழையில், திரு.வி.க., நகர் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக அத்தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதி
 தொடர் மின் தடை, மழைநீர் தேக்கம் போராட்ட களமானது திரு.வி.க., நகர்

புளியந்தோப்பு : திரு.வி.க., நகரில் தொடர் மின் தடை, குடிநீருடன் கழிவு நீர் கலப்பு, மழைநீர் தேக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 10க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதி போராட்டக்களமாக மாறியது.சமீபத்தில் கொட்டி தீர்த்த கன மழையில், திரு.வி.க., நகர் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக அத்தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதி மக்கள் கடும் துயரம் அனுபவித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதி மக்கள் பல்துறையை கண்டித்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புளியந்தோப்பு பகுதியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதை கண்டித்து, 50க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். புளியந்தோப்பு, டிமல்லஸ் சாலையில் தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ஒரு வாரமாக தொடர் மின் தடை உள்ளதை கண்டித்து, நேற்று மறியலில் ஈடுபட்டனர். பாரத் இந்து முன்னணியினர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், திரு.வி.க., நகர் மண்டல அலுவலர் பரந்தாமன் பேச்சு நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்

புளியந்தோப்பு, ராமசாமி தெரு பகுதி மக்கள் 70க்கும் மேற்பட்டோர், தொடர் மின் தடையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்புளியந்தோப்பு நெடுஞ்சாலை, அம்பிகா உணவகம் அருகே மின் தடையை கண்டித்து, நேற்று முன்தினம் 50க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர் பெரம்பூர், ஜமாலியா, மங்களபுரம் சந்திப்பில், மின் வினியோகம் கோரி அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு மறியலில் ஈடுபட்டனர்புளியந்தோப்பு, டிகாஸ்டர் சாலையில் 70க்கும் மேற்பட்டோர் கழிவு நீரை அகற்றக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி 40க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்டனர்பேசின்பாலம், காந்தி நகர் பகுதியில் தொடர் மின் தடையை கண்டித்து 40க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஆபத்து காலத்தில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் திரு.வி.க.,நகர் தொகுதி மக்களை கண்டுகொள்ளாததால் அந்த தொகுதி போராட்டக்களமாக மாறி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-நவ-202116:49:57 IST Report Abuse
ராஜா சென்னையில் கொடைக்கானல் மாதிரி இருக்குன்னு தானே நியூஸ் போட்டாங்க...இவங்க எதுக்கு இப்போ மழை, வெள்ளம், மின்தடைன்னு போராட்டம் பண்றாங்க?
Rate this:
Cancel
15-நவ-202113:14:44 IST Report Abuse
அப்புசாமி இந்த ஊர் பகுதிக்கெல்லாம் தமிழறிஞர்களின் பேரை வெச்சு, அவிங்க பேரைக் கெடுக்கறாங்க. நம்ம தத்திகளின் பேரையே வெச்சுருங்க. பேருக்கேத்த மாதிரி ஊரும்.இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X