தமிழ்நாடு

மழையால் சேதமடைந்த சாலைகளில் சீரமைப்பு பணிகள் விறுவிறு

Added : நவ 15, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதியில், நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள சாலைகளை சீரமைக்க, வெளி மாவட்டங்களில் இருந்து 500 சாலை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.சென்னையில் ஐந்து நாட்கள் தொடர் மழையால், சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில், பல சாலைகள் சேதமடைந்தன. தண்ணீர் தேங்காமல் வடிந்தோட சில சாலைகள் சேதப்படுத்தப்பட்டன.சென்னையில், சாலை பராமரிப்பில் மாநகராட்சி,
 மழையால் சேதமடைந்த சாலைகளில் சீரமைப்பு பணிகள் விறுவிறு

சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதியில், நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள சாலைகளை சீரமைக்க, வெளி மாவட்டங்களில் இருந்து 500 சாலை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் ஐந்து நாட்கள் தொடர் மழையால், சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில், பல சாலைகள் சேதமடைந்தன. தண்ணீர் தேங்காமல் வடிந்தோட சில சாலைகள் சேதப்படுத்தப்பட்டன.சென்னையில், சாலை பராமரிப்பில் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சாலை மேம்பாட்டு வாரியம் ஈடுபட்டு வருகிறது.

நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள, சாலைகள் நேற்று முன்தினம் இரவு முதல் முழுவீச்சில் சீரமைக்கப்பட்டு வருகின்றன.மழைநேர சாலை பள்ளம் சீரமைப்புக்கு, 'கோல்டு மிக்ஸ்' என்ற ரெடிமேட் தார் கலவை பயன்படுத்தப்படும். தேவை அதிகரிப்பால், இந்த கலவையை நெடுஞ்சாலைத்துறையே தயாரிக்கிறது. மழைக்கால சாலை சீரமைப்புக்காக, கோவை, பொள்ளாச்சி, ஊட்டி, மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் இருந்து, 500 சாலை பணியாளர்கள், சென்னை வந்தனர்.

இவர்கள் மற்றும் சென்னை சாலை பணியாளர்கள் இணைந்து, அண்ணாசாலை, ஜி.எஸ்.டி., சாலை, ரேடியல் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, வேளச்சேரி - தாம்பரம் உள்ளிட்ட சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களை, இரவு பகலாக சீரமைத்து வருகின்றனர்.இதன் மூலம், வாகன ஓட்டிகள் சிரமம் இல்லாமல் பயணம் செய்ய முடியும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X