பொது செய்தி

தமிழ்நாடு

லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

Added : நவ 15, 2021
Share
Advertisement
காசிமேடு : 'டிரைவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை' என, டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.நாளுக்கு நாள் உயர்ந்து வரும் டீசல் விலையால், கன்டெய்னர் லாரிகளை இயக்க முடியவில்லை.கடந்த 2014ம் ஆண்டு அறிவித்த புதிய வாடகை தொகையை அளிக்காமல், துறைமுக பொறுப்பு கழக நிர்வாகிகள், சி.எப்.எஸ்., நிறுவனம் ஆகியோர், கடந்த ஏழு

காசிமேடு : 'டிரைவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை' என, டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.நாளுக்கு நாள் உயர்ந்து வரும் டீசல் விலையால், கன்டெய்னர் லாரிகளை இயக்க முடியவில்லை.கடந்த 2014ம் ஆண்டு அறிவித்த புதிய வாடகை தொகையை அளிக்காமல், துறைமுக பொறுப்பு கழக நிர்வாகிகள், சி.எப்.எஸ்., நிறுவனம் ஆகியோர், கடந்த ஏழு ஆண்டுகளாக இழுத்தடித்து வருகின்றனர்.தற்போது, டீசல் லிட்டர் 100 ரூபாயை எட்டியுள்ளது.

எனவே, 40 சதவீதம் வாடகையை உயர்த்தி தராவிட்டால், நவ., 15ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். தற்போது போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.காசிமேடு துறைமுகத்தில் பத்திரிகையாளர்களிடம், சங்க செயலர் கோபி கூறுகையில், 'டிரைவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை. இன்று வழக்கம் போல் கன்டெய்னர் டிரெய்லர்கள் இயங்கும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X