பொது செய்தி

இந்தியா

வடிகால் வாய்க்காலில் ஆக்கிரமிப்பு; பிள்ளையார்குப்பத்தில் தண்ணீர் வடிவதில் சிக்கல்

Added : நவ 15, 2021
Share
Advertisement
பாகூர் : பிள்ளையார்குப்பம் மெயின் ரோட்டில் உள்ள வடிகால் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி - கடலுார் சாலையில், பிள்ளையார்குப்பம் சந்திப்பில் பெரிய வடிகால் வாய்க்கால் செல்கிறது. பாகூரில் இருந்து வரும் இந்த வாய்க்கால், பின்னாச்சிக்குப்பம், சார்காசிமேடு, பிள்ளையார்குப்பம், கிருமாம்பாக்கம் வழியாக சென்று,
 வடிகால் வாய்க்காலில் ஆக்கிரமிப்பு;   பிள்ளையார்குப்பத்தில் தண்ணீர் வடிவதில் சிக்கல்


பாகூர் : பிள்ளையார்குப்பம் மெயின் ரோட்டில் உள்ள வடிகால் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி - கடலுார் சாலையில், பிள்ளையார்குப்பம் சந்திப்பில் பெரிய வடிகால் வாய்க்கால் செல்கிறது.

பாகூரில் இருந்து வரும் இந்த வாய்க்கால், பின்னாச்சிக்குப்பம், சார்காசிமேடு, பிள்ளையார்குப்பம், கிருமாம்பாக்கம் வழியாக சென்று, ரெட்டிச்சாவடி ஓடையில் கலக்கிறது.பிள்ளையார்குப்பம் பஸ் நிறுத்த பகுதி வழியாக செல்லும் இந்த வாய்க்கால், பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சுமார் 20 அடி அகலம் கொண்ட இந்த வாய்க்கால், ஒரு இடத்தில் மூன்று அடியாக சுருங்கி விடுகிறது.

இதனால், மழை காலங்களில் தண்ணீர் செல்ல முடியாமல், சாலையில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக, அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.இந்த வாய்க்காலின் குறுக்கே பல இடங்களில் அனுமதி பெறாமல் சிறு பாலங்கள் கட்டப்பட்டு, ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது.அதனால் வாய்க்காலில் நீர் போக்கு தடைபட்டு, மழை நீர் வயல்களின் வழியாக சென்று பயிர்களை சேதப்படுத்துவதால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த வடிகால் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X