பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ முகாம்களில் மக்கள் கூட்டம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
சென்னை : பருவமழையால் ஏற்பட்ட காய்ச்சல், சளி, சேற்றுப்புண் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட பலர், மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்றனர். இதனால், சென்னையில் நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் விடுமுறை நாளான நேற்று மக்கள் கூட்டம் காணப்பட்டது. பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து, சென்னையில் பெய்த கனமழையால், காய்ச்சல், சளி, இருமல், வாந்தி, பேதி, சேற்றுப்புண் போன்ற
 மருத்துவ முகாம்களில் மக்கள் கூட்டம்

சென்னை : பருவமழையால் ஏற்பட்ட காய்ச்சல், சளி, சேற்றுப்புண் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட பலர், மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்றனர். இதனால், சென்னையில் நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் விடுமுறை நாளான நேற்று மக்கள் கூட்டம் காணப்பட்டது.

பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து, சென்னையில் பெய்த கனமழையால், காய்ச்சல், சளி, இருமல், வாந்தி, பேதி, சேற்றுப்புண் போன்ற பாதிப்புகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, கழிவுநீர் அதிகம் தேங்கிய பகுதியில் வசிப்போருக்கு, ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று, கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடத்தப்பட்டது.அதனுடன், தேவைப்படும் இடங்களில், மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

இதில், பொதுமக்கள் அதிகம் பங்கேற்று சிகிச்சை எடுத்துக் கொண்டனர். குறிப்பாக, வேளச்சேரி, தரமணி, கிண்டி, கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், ஆதம்பாக்கம், ஆலந்துார் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் போடப்பட்டன.காய்ச்சிய நீரை குடிக்கவும்!மழையின் காரணமாக அடித்துவரப்பட்ட குப்பை கழிவுகளால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு அறிவுரைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குடிநீரை, 10 -- 20 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, பின் ஆறவைத்து பருக வேண்டும் கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும்கொசுப்புழு உற்பத்தியை தடுக்க, சுற்றுப்புறங்களில் நீர் தேங்கக்கூடிய வாய்ப்புள்ள தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும்.மேலும் மழைக்கால நோய்களான சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் சேற்றுப்புண் போன்ற பாதிப்புகள் இருப்பின், சுகாதார நிலையம் அல்லது சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவுரை வழங்கிஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X