மசாஜ் சென்டரில் சிறுமி பலாத்காரம் தனியார் நிறுவன ஊழியர் இருவர் கைது

Added : நவ 15, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மசாஜ் சென்டரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், முதற்கட்டமாக தனியார் நிறுவன ஊழியர் இருவர் கைது செய்யப்பட்டனர்.புதுச்சேரி அண்ணா நகரில் இயங்கிய மசாஜ் சென்டரில் போலீசார் கடந்த அக். 16ம் தேதி சோதனை நடத்தினர். அங்கு விபசார தொழிலில் ஈடுபட்ட 4 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதில் ஒருவர் 17 வயது சிறுமி என தெரியவந்தது.மசாஜ் சென்டர் பெயரில்

புதுச்சேரி : மசாஜ் சென்டரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், முதற்கட்டமாக தனியார் நிறுவன ஊழியர் இருவர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி அண்ணா நகரில் இயங்கிய மசாஜ் சென்டரில் போலீசார் கடந்த அக். 16ம் தேதி சோதனை நடத்தினர். அங்கு விபசார தொழிலில் ஈடுபட்ட 4 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதில் ஒருவர் 17 வயது சிறுமி என தெரியவந்தது.மசாஜ் சென்டர் பெயரில் விபசார தொழில் நடத்திய பெண் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறுமியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று, அவரை பாலியல் பலாத்காரம் செய்த, 40 பேர் மீது, 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்கு பதிந்தனர்.மசாஜ் சென்டர் நடத்திய பெண்ணை காவலில் எடுத்து உருளையன்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். மசாஜ் சென்டருக்கு வந்தவர்களில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் விபரங்களை பெற்றனர்.

அதன்பேரில் முதற்கட்டமாக, மசாஜ் சென்டரில் சிறுமியை பலாத்காரம் செய்த சென்னை ராமாபுரம், சாந்தி நகரைச் சேர்ந்த விக்னேஷ்வரன், 29; புதுச்சேரி கொட்டுப்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த அருண், 24; ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். கைதான இருவரும் தனியார் நிறுவன ஊழியர்கள். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 38 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X