தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை திருநள்ளார் பங்க் மீது போலீசில் புகார்

Added : நவ 15, 2021
Share
Advertisement
காரைக்கால் : திருநள்ளாரில் பா.ஜ., பிரமுகரின் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை செய்வதாக, பெங்களூருவை சேர்ந்த நபர் அளித்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிலம்பரசன்,45, என்பவர், பெங்களூரில் வசித்து வருகிறார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு தனது உறவினர்களுடன், திருவாரூர் ஆலங்குடி குருபகவானை தரிசனம் செய்து

காரைக்கால் : திருநள்ளாரில் பா.ஜ., பிரமுகரின் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை செய்வதாக, பெங்களூருவை சேர்ந்த நபர் அளித்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

.விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிலம்பரசன்,45, என்பவர், பெங்களூரில் வசித்து வருகிறார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு தனது உறவினர்களுடன், திருவாரூர் ஆலங்குடி குருபகவானை தரிசனம் செய்து விட்டு, நேற்று, சொகுசு காரில் காரைக்கால் வந்தார்.திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, ஊருக்கு புறப்பட்டனர். திருநள்ளாறு சாலையில் நகராட்சி சந்தை திடல் அருகில் உள்ள பா.ஜ., பிரமுகருக்கு சொந்தமான, பி.ஆர்.என்., பெட்ரோல் பங்கில், சிலம்பரசன் தனது காருக்கு பெட்ரோல் நிரப்பினார்.புறவழிச்சாலை வழியாக சுமார் 2 கி.மீ., துாரம் சென்ற போது, கார் திடீரென பழுதாகி நின்றது.மெக்கானிக் வந்து பார்த்ததில், பெட்ரோலில் தண்ணீர் கலந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சிலம்பரசன் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன்பேரில், போலீசார், சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்கில் இருந்தும், சிலம்பரசன் காரில் இருந்த பெட்ரோலையும் எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X