இந்தியா

அமித்ஷா தலைமையில், தென் மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
ஆந்திர மாநிலம், திருப்பதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், தென் மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது.இதில், புதுச்சேரியிலிருந்து கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டனர்.அவர்களை, ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சால்வை அணிவித்து வரவேற்றார்.இக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி பேசியதாவது;மாநில அந்தஸ்து இல்லாததால்,
அமித்ஷா தலைமையில், தென் மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டம்

ஆந்திர மாநிலம், திருப்பதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், தென் மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது.

இதில், புதுச்சேரியிலிருந்து கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டனர்.அவர்களை, ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சால்வை அணிவித்து வரவேற்றார்.இக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி பேசியதாவது;மாநில அந்தஸ்து இல்லாததால், இருக்கும் அதிகாரத்தை கொண்டு, புதுச்சேரியில் அதிக தொழிற்சாலைகளை கொண்டுவரவோ, சுற்றுலாவுக்கான உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவோ, வேலை வாய்ப்புகளை உருவாக்கவோ, முடியவில்லை. எனவே, நீண்ட நாள் கோரிக்கையான மாநில அந்தஸ்தை புதுச்சேரிக்கு வழங்க வேண்டும்.பு

துச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆண்டு பட்ஜெட்டுக்கு, உள்துறை அமைச்சகத்தின் மத்திய உதவி முற்றிலும் போதுமானதாக இல்லை.உதாரணமாக, நடப்பு பட்ஜெட்டில் 1.57 சதவீதம் அதிகரிப்பு மட்டுமே அனுமதிக்கப்பட்டது.ஜி.எஸ்.டி., அமலாக்கத்தில் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு கட்டவும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யை குறைத்ததால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதலாக ரூ. 1500 கோடி மத்திய உதவி தேவைப்படுகிறது.

மத்திய நிதி உதவி திட்டங்களில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு இணையாக நடத்த வேண்டும்.புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழகத்தில் 216 ஏக்கர் நிலமும், புதுச்சேரியில் 54 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட வேண்டும். இதற்கு சுமார் ரூ. 225 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதை அளிக்க வேண்டும்.தற்போதைய சட்டசபை கட்டடம் பழமையானதாக, முற்றிலும் போதுமானதாக இல்லாமல் உள்ளது.

எனவே, தலைமைச் செயலகம் உள்ளிட்டவை அடங்கிய புதிய சட்டசபை வளாகம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ரூ. 300 கோடி ரூபாய் மானியம் தேவைப்படும். கொரோனா தொடர்பான செலவினங்களுக்கும், மருத்துவமனைகளில் தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்துவது முற்றிலும் அவசியம் என்பதால், ரூ. 500 கோடி நிதியுதவி தர வேண்டும்.

கடந்த ஆட்சியில் கூட்டுறவு துறையை முழுமையாக அலட்சியப்படுத்தியதால், கூட்டுறவு நிறுவனங்கள் நலிவடைந்து விட்டன.கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஸ்பின்னிங் மில் உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களை புதுப்பிப்பதன் மூலம், நேரடியாக விவசாயிகள், நுகர்வோர் பயன் பெறுவர். எனவே, கூட்டுறவு நிறுவனங்கள் புதுத்துயிர் பெற, சிறப்பு நிதியாக ரூ. 500 கோடி வழங்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் ரங்கசாமி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X