இந்தியா

திருப்பதியில் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி தரிசனம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
புதுச்சேரி ; திருப்பதி சென்ற கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.ஆந்திர மாநிலம் திருப்பதியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், தென் மாநில முதல்வர்கள் மாநாடு நேற்று நடந்தது.இந்த மாநாட்டில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா மாநில முதல்வர்கள், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் யூனியன்
 திருப்பதியில் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி தரிசனம்

புதுச்சேரி ; திருப்பதி சென்ற கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், தென் மாநில முதல்வர்கள் மாநாடு நேற்று நடந்தது.இந்த மாநாட்டில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா மாநில முதல்வர்கள், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் யூனியன் பிரதேச கவர்னர்கள், லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பங்கேற்றனர்.

மாநாட்டில் பங்கேற்க, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று முன்தினம் காரில் திருப்பதிக்கு சென்றார். கவர்னர் தமிழிசை, தனி விமானம் மூலம் திருப்பதி சென்றார்.மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக கவர்னர் தமிழிசை, நேற்று காலை திருமலை ஏழுமலையான் சுவாமியை தரிசனம் செய்தார்.மதியம், முதல்வர் ரங்கசாமி மற்றும் புதுச்சேரி அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகிய இருவரும், திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்து வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X