பொது செய்தி

தமிழ்நாடு

மெட்ரோ பணிகளால் வெள்ளம் அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
சென்னை : ''சென்னையின் பல பகுதிகளில், மெட்ரோ ரயில் பணிகளுக்காக வடிகால்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இது தான் சென்னை வெள்ளக்காடாக மாற காரணம்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.பருவ மழை தீவிரம்டைந்ததை அடுத்து, சென்னையில் சமீபத்தில் பெருமழை கொட்டி தீர்த்தது. இதனால், பிரதான சாலைகள், குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. கடந்த மூன்று

சென்னை : ''சென்னையின் பல பகுதிகளில், மெட்ரோ ரயில் பணிகளுக்காக வடிகால்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இது தான் சென்னை வெள்ளக்காடாக மாற காரணம்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பருவ மழை தீவிரம்டைந்ததை அடுத்து, சென்னையில் சமீபத்தில் பெருமழை கொட்டி தீர்த்தது. இதனால், பிரதான சாலைகள், குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. கடந்த மூன்று நாட்களாக மழை பெய்யவில்லை.தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பல பகுதிகளில் தொற்று பாதிப்பால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து, அரசு சார்பில், சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னை எம்.ஜி.ஆர்., நகரில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.அவருடன், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., பிரபாகர ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.பின், அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:மழைக்காலத்திற்கு பின் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் பணியில், அரசு ஈடுபட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் 3,400 களப்பணியாளர்கள் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை நீர் தேங்கிய பகுதிகளில், கொசு மருந்து அடிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது உள்ளிட்ட பணிகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். இதற்காக 1,300 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பை மற்றும் மரக்கழிவுகள் பல இடங்களில் மலை போல் தேங்கியுள்ளன. இதனால், கடந்த இரண்டு நாட்களாக 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் டன் வரை குப்பை அகற்றப்பட்டன.தமிழகத்தில், 75 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 50 ஆயிரம் இடங்களில், எட்டாவது 'மெகா' தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. கடந்த 2ம் தேதி முதல், 'வீடு தேடி சென்று தடுப்பூசி' செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 கோடியே, 10 லட்சத்து, 63 ஆயிரத்து, 145 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். சென்னையில் 2,000 இடங்களில் முகாம் நடக்கிறது.மத்திய அரசு, தமிழகத்திற்கான இலக்கை காட்டிலும் கூடுதல் தடுப்பூசி நமக்கு தருகிறது. அந்த வகையில் 87 லட்சத்து, 88 ஆயிரத்து, 518 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.மழையால் பாதிக்கப்பட்ட மூன்று இடங்களை, நெடுஞ்சாலை துறை அமைச்சருடன் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டோம்.

இதில், விருகம்பாக்கம் பாரதிதாசன் காலனி பகுதியும் ஆய்வு செய்யப்பட்டது.ஜவஹர்லால் நேரு சாலை, காசி திரையரங்கம் அருகே, நெடுஞ்சாலை துறையின் மழை நீர் வடிகால் 600 மீட்டர் அளவிற்கு 'மெட்ரோ' ரயில் பணிகளால் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, 600 மீட்டருக்கு வடிகால் கட்டி விட்டால், பாரதிதாசன் காலனியில் தேங்கும் மழை நீர், அடையாற்றிற்கு சென்று விடும்.அதேபோல், ஈக்காட்டுத்தாங்கலில், ஜவஹர்லால் நேரு சாலையில், 150 மீட்டர் வடிகால் துண்டிக்கப்பட்டதால், பாலாஜி நகர் மற்றும் பிள்ளையார் கோவில் தெருவில் மழை நீர் தேங்கியது. மேலும், சைதாப்பேட்டை அண்ணா சாலையில், 100 மீட்டருக்கு வடிகால் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும், ஆறு மாதங்களில் சீர் செய்யப்படும் என, நெடுஞ்சாலை துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மழையின் போது, இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்கப்படும். எந்த ஆக்கிரமிப்பால் எங்கே வெள்ளம் ஏற்பட்டது என தகவல் தெரிவித்தால், உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.சென்னையில், முதல்வர் ஸ்டாலின், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையில், 14 பேர் குழுவை நியமித்துள்ளார். இந்த குழு, சென்னையில் எங்கெல்லாம் மழை நீர் தேக்கம் இருக்கிறது;

எங்கு புதிதாக மழை நீர் வடிகால் கட்ட வேண்டும் என ஆய்வு செய்து அரசிற்கு தகவல் தெரிவிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பாக்கம் ஊராட்சியில், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான, சிறப்பு முகாம்களை, அமைச்சர்கள் சுப்பிரமணியன், நாசர் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்று நேரில் ஆய்வு செய்தனர். வெள்ள பாதிப்பு பற்றிய கணக்கெடுப்பு நடந்து வருவதாக, அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X