பொது செய்தி

தமிழ்நாடு

22 சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழை நீர் அகற்றம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 22 சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழை நீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சாலையில் தேங்கிய மழை நீரை

சென்னை : சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 22 சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழை நீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சாலையில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியை, மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி மழைநீர் தேங்கிய, 778 இடங்களில், 574 இடங்களில் மழைநீர் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. மேலும், 204 இடங்களில் மழைநீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மழை நீரை அகற்ற, 726 மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.குறிப்பாக, 22 சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீர் முழுவதும் அகற்றப்பட்டு, மக்கள் பயன் பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

காற்றில் சாய்ந்த 522 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.மேலும், 69 நிவாரண முகாம்களில், 3,492 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மழையால் சேதமடைந்த, மந்தைவெளி ஆர்.கே.மடம் சாலை, தி.நகர் திருமலை பிள்ளை சாலை ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X