இந்தியா

போலீஸ் மீதான புகார்களை விசாரிக்க... உடனடி நடவடிக்கை எடுக்க முடிவு

Added : நவ 15, 2021
Share
Advertisement
புதுச்சேரி : போலீசாரின் கண்ணியக் குறைவான, ஒழுங்கீன செயல்கள் குறித்து விசாரிக்க,காவல் துறையில் மாவட்ட அளவில் புதிதாக உயர்மட்ட கமிட்டி அமைக்கப் பட்டுள்ளது.பொதுமக்கள் அச்சப்படாமல் அணுக, போலீஸ் ஸ்டேஷன்களின் நிறத்தை மாற்றினாலும், போலீசாரிடம் இன்னும் மனமாற்றம் இல்லை. பணிச்சுமை காரணமாக காவலர்கள், மன அழுத்தத்தில் பொது மக்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்றனர்.இப்படி

புதுச்சேரி : போலீசாரின் கண்ணியக் குறைவான, ஒழுங்கீன செயல்கள் குறித்து விசாரிக்க,காவல் துறையில் மாவட்ட அளவில் புதிதாக உயர்மட்ட கமிட்டி அமைக்கப் பட்டுள்ளது.

பொதுமக்கள் அச்சப்படாமல் அணுக, போலீஸ் ஸ்டேஷன்களின் நிறத்தை மாற்றினாலும், போலீசாரிடம் இன்னும் மனமாற்றம் இல்லை. பணிச்சுமை காரணமாக காவலர்கள், மன அழுத்தத்தில் பொது மக்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்றனர்.

இப்படி நடந்து கொள்ளும் காவலர்கள் மீது, புகார் செய்யவும், நடவடிக்கை எடுக்கவும், 'போலீசிங் ஆப் போலீஸ்' என்ற பெயரில் துறை ரீதியான விசாரணை கமிட்டி உள்ளது.இக்கமிட்டியில், சம்பந்தப்பட்ட போலீசார் மீது புகார் அளித்தால், இரு தரப்பினரையும் வரவழைத்து விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.புதிய கமிட்டிஇந்நிலையில், புதுச்சேரி, காரைக்காலில் போலீசாரின் கண்ணிய குறைவான, ஒழுங்கீன செயல்கள் குறித்து விசாரிக்க, மாவட்ட அளவில் புதிய உயர்மட்ட கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கமிட்டியின் சேர்மனாக சட்டம் - ஒழுங்கு சீனியர் எஸ்.பி., லோகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து எஸ்.பி., மற்றும் புதுச்சேரி மகளிர் காவல் நிலைய அதிகாரி ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.காவல் துறையில் ஏற்கனவே உள்ள 'போலீசிங் ஆப் போலீஸ்' கமிட்டியும், தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய கமிட்டியும் நடைமுறையில் இருக்கும்.போலீஸ் நிலையங்களில் கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், அதுகுறித்து 'போலீசிங் ஆப் போலீஸ்' கமிட்டியிடம் மக்கள் முறையிடலாம். அந்த கமிட்டி, புகார் குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யும்.மேலும், போலீசார் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தும்.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய கமிட்டியானது, போலீஸ் ஸ்டேஷன் மற்றும் பொது இடங்களில் போலீசாரின் ஒழுங்கீனமான செயல்கள் குறித்த புகார்கள் மீது நேரடியாக விசாரணை நடத்தி, டி.ஜி.பி., மற்றும் ஏ.டி.ஜி.பி.,க்கு அறிக்கை தாக்கல் செய்யும்.இந்த அறிக்கை அடிப்படையில், கண்ணியக் குறைவான செயல்களில் ஈடுபட்ட போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.கண்ணியம் காப்போம்இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது:பொது மக்களுக்காக தான் நாம் வேலை செய்கிறோம்

.அவர்கள் தான் நமக்கு சம்பளம் தருகின்றனர் என்பதை போலீசார் புரிந்து கொள்ள வேண்டும்.பொது இடங்களில் ஒன்றிரண்டு காவலர்கள் செய்யும் ஒழுங்கீன செயல்கள், ஒட்டுமொத்த காவல் துறையின் கண்ணியத்தையும் நன் மதிப்பையும் குறைத்து விடுகிறது.போலீசார் பல்வேறு கொலை, கொள்ளை என குற்றச் சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடித்து சாதித்தாலும், அவர்களின் ஒழுங்கீனமான செயல்கள், கறைகள் போன்று நீங்காத வடுக்களாகவே இருக்கும். இதன் காரணமாகவே புதிய கமிட்டி தோற்றுவிக்கப் பட்டுள்ளது.போலீசார் மீது பொது மக்களிடம் இருந்து புகார் வந்தால், புதிய கமிட்டி விரைந்து விசாரணையில் இறங்கும். காவல் துறையின் கண்ணியத்தை காக்கும்இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X