திறந்தவெளி மழை நீர் வடிகால் அணுகு சாலையில் அபாயம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
சென்னை : புறவழிச்சாலை அணுகு சாலையின் இருபுறமும் உள்ள திறந்தவெளி மழை நீர் வடிகாலால் உயிர்பலி அபாயம் நீடிக்கிறது.புழல், ரெட்டேரி சந்திப்பு முதல், தாம்பரம் வரையிலான 32 கி.மீ., துார புறவழிச்சாலை, சென்னை மற்றும் பிற மாவட்ட போக்குவரத்துக்கு பயன்படுகிறது.இந்த சாலையின் இருபுறமும், அணுகு சாலையில் 10 அடி ஆழம், 1.5 அடி அகலம் உடைய திறந்தவெளி மழைநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகாலில் நாய்,

சென்னை : புறவழிச்சாலை அணுகு சாலையின் இருபுறமும் உள்ள திறந்தவெளி மழை நீர் வடிகாலால் உயிர்பலி அபாயம் நீடிக்கிறது.புழல், ரெட்டேரி சந்திப்பு முதல், தாம்பரம் வரையிலான 32 கி.மீ., துார புறவழிச்சாலை, சென்னை மற்றும் பிற மாவட்ட போக்குவரத்துக்கு பயன்படுகிறது.இந்த சாலையின் இருபுறமும், அணுகு சாலையில் 10 அடி ஆழம், 1.5 அடி அகலம் உடைய திறந்தவெளி மழைநீர் வடிகால் உள்ளது.

இந்த வடிகாலில் நாய், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மட்டுமின்றி, இரு சக்கர வாகன ஓட்டிகளும் விழுந்துள்ளனர். உயிர் பலி சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இரவிலும், மழைக்காலத்திலும் நிலைமை மேலும் மோசமடைகிறது.புதிய நபர்கள் யாராவது, வடிகால் இருப்பதை அறியாமல் சென்றால் உயிர் பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீசார், மழைநீர் தேங்கிய அணுகு சாலையில், வடிகால் இருப்பதை எச்சரிக்கும் வகையில், தற்காலிக தடுப்புகள் அமைத்து, வாகன ஓட்டிகளை எச்சரிக்க வேண்டும்.மாநகராட்சி நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், தேங்கிய மழை நீரை அகற்ற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.முறைகேடுஅதேபோல், மதுரவாயல், அம்பத்துார், வளசரவாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து, தனியார் கழிவு நீர் லாரிகள் வாயிலாக சேகரிக்கப்படும் கழிவுநீர் இந்த மழைநீர் வடிகாலில் இரவு நேரங்களில் முறை கேடாக விடப்படுகிறது.இது குறித்து தெரிந்தும் அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை.

எந்த நடவடிக்கையும் இல்லைகடந்த 2020 ஜனவரியில், மத்திய பாதுகாப்பு படை உதவி கமிஷனர் சரவண ராஜ் இரு சக்கர வாகனத்துடன் அம்பத்துார், சூரப்பட்டு அருகே, அந்த வடிகாலில் விழுந்து பலியானார்.அதே ஆண்டு டிசம்பரில், திருவேற்காடு அயனம்பாக்கத்தைச் சேர்ந்த, தனியார் கல்லுாரி பேராசிரியை கரோலின், அவரது 20 வயது மகளுடன், இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, மதுரவாயல் அருகே புறவழிச்சாலையின் மழை நீர் வடிகாலில் விழுந்து பலியானது குறிப்பிடத்தக்கது.ஆனால் இன்று வரை நெடுஞ்சாலைத் துறையால், எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X