எம்.பி.பி.எஸ்., சேர்க்கை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

எம்.பி.பி.எஸ்., சேர்க்கை

Added : நவ 15, 2021
Share
புதுச்சேரி : புதுச்சேரி மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி. பி.எஸ்., சேர்வதற்கு, நேற்று வரை 8,265 பேர் பதிவு செய்துள்ளனர்.புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு 'சென்டாக்' மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.நடப்பு கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த 8ம் தேதி முதல், www.centac puducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில் வினியோகிக்கப்பட்டு

புதுச்சேரி : புதுச்சேரி மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி. பி.எஸ்., சேர்வதற்கு, நேற்று வரை 8,265 பேர் பதிவு செய்துள்ளனர்.புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு 'சென்டாக்' மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

நடப்பு கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த 8ம் தேதி முதல், www.centac puducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில் வினியோகிக்கப்பட்டு வருகிறது.எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்காக நேற்று வரை 8,265 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 3,862 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நேற்று வரை 804 பேரும், நிர்வாக இடங்களுக்கு 2,587 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு சேர்த்து 389 பேரும், என்.ஆர்.ஐ., இடங்களுக்கு 82 பேரும் விண்ணப்பித்துள்ளனர். வரும் 22ம் தேதி வரை, விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X