2015ல் பெய்த கன மழைக்கு நிரம்பாத குறுங்காலீஸ்வரர் கோவில் குளம் 'புல்'

Added : நவ 15, 2021
Share
Advertisement
கோயம்பேடு : கோயம்பேடு, குறுங்காலீஸ்வரர் கோவில் குளம் பல ஆண்டுகளுக்கு பின் நிரம்பியுள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கோயம்பேடில் 25 ஆயிரத்து 200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது குறுங்காலீஸ்வரர் கோவில். இந்த கோவில் 1,500 ஆண்டுகள் பழமையானது. இக்கோவில், வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது.கோவில் வளாகத்தில்
 2015ல் பெய்த கன மழைக்கு நிரம்பாத குறுங்காலீஸ்வரர் கோவில் குளம் 'புல்'

கோயம்பேடு : கோயம்பேடு, குறுங்காலீஸ்வரர் கோவில் குளம் பல ஆண்டுகளுக்கு பின் நிரம்பியுள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கோயம்பேடில் 25 ஆயிரத்து 200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது குறுங்காலீஸ்வரர் கோவில். இந்த கோவில் 1,500 ஆண்டுகள் பழமையானது.

இக்கோவில், வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது.கோவில் வளாகத்தில் உள்ள குளம், 2017ம் ஆண்டு, 6 லட்சம் ரூபாய் மதிப்பில் துார் வாரப்பட்டு சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால், குறுங்காலீஸ்வரர் கோவில் குளம் நிரம்பி உள்ளது.

பல ஆண்டுகளுக்கு பின் கோவில் குளம் நிரம்பி உள்ளதால், பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'சென்னையில் 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில் கோவில் குளம் முழுமையாக நிரம்பவில்லை.அதன் பின் ஏற்பட்ட மழை மற்றும் புயல்களிலும் முழுமையாக நிரம்பவில்லை. கோவில் குளத்திற்கு மழை நீர் வரத்து இருக்கும் வகையில், மழை நீர் வடிகால் ஏற்படுத்தப்பட்டதால், 20 ஆண்டுகளுக்கு பின், குறுங்காலீஸ்வரர் கோவில் குளம் நிரம்பி உள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X