பொது செய்தி

இந்தியா

இறக்குமதி மணலை தமிழகம் வழியாக கொண்டு வர அனுமதிக்க வேண்டும்

Added : நவ 15, 2021
Share
Advertisement
புதுச்சேரி : இறக்குமதி மணலை தமிழக பகுதி வழியாக கொண்டு வர தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என, கவர்னர் தமிழிசை பேசினார்.ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற தென் மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் புதுச் சேரி கவர்னர் தமிழிசை பேசியதாவது:இந்திய விமான நிலைய ஆணையம், புதுச்சேரி விமான நிலையத்தை இரண்டு கட்டமாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்திருந்தது. இதன்படி, 57.5 ஏக்கர்


புதுச்சேரி : இறக்குமதி மணலை தமிழக பகுதி வழியாக கொண்டு வர தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என, கவர்னர் தமிழிசை பேசினார்.ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற தென் மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் புதுச் சேரி கவர்னர் தமிழிசை பேசியதாவது:

இந்திய விமான நிலைய ஆணையம், புதுச்சேரி விமான நிலையத்தை இரண்டு கட்டமாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்திருந்தது. இதன்படி, 57.5 ஏக்கர் நிலம் புதுச்சேரியிலும், 368 ஏக்கர் நிலம் தமிழக பகுதியிலும் கையகப்படுத்த திட்டமிட்டது.தற்போது இந்திய விமான நிலைய ஆணையம், ஒரே கட்டமாக விரிவாக்கம் செய்ய எத்தகைய நிதியுதவி தேவை என கேட்டுள்ளது.இந்நேரத்தில் தமிழகத்தின் உதவி இல்லாமல் நிலம் கையகப்படுத்த முடியாது. எனவே, விமான நிலைய விரிவாக்கத்திற்கான செலவு நிதியில் தமிழகமும் பங்களிக்க வேண்டும்.

இதன் மூலம் புதுச்சேரி மட்டுமின்றி, கடலுார், விழுப்புரம் மாவட்டங்களும் பெரிதும் பயனடையும். தமிழக மாவட்டங்களுக்கு இடையே விமான தொடர்பு கிடைக்கும்.புதுச்சேரியில் தற்போது எம். சாண்ட் மூலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் மணல் தேவை மாநிலத்தில் அதிகரித்துள்ளது. அதனால், வெளி நாடுகளில் இருந்து காரைக்கால் துறைமுகம் வழியாக மணல் இறக்குமதி செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.அந்த மணலை, காரைக்காலில் இருந்து தமிழக பகுதி வழியாக புதுச்சேரிக்கு லாரிகளில் கொண்டு வர தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு கவர்னர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X