குடிநீர் சப்ளை குறைவு நொளம்பூர் மக்கள் தவிப்பு| Dinamalar

குடிநீர் 'சப்ளை' குறைவு நொளம்பூர் மக்கள் தவிப்பு

Added : நவ 15, 2021
Share
நொளம்பூர் : நொளம்பூரில் போதுமான அளவு குடிநீர் வினியோகம் இல்லாததால், மக்கள் தவித்து வருகின்றனர்.வளசரவாக்கம் மண்டலம் 143வது வார்டு நொளம்பூரில், வி.ஜி.என்., மான்டே கார்லோ காலனி உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.இப்பகுதிக்கு, சென்னை குடிநீர் வாரியம் சார்பில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.ஆனால், ஒரு மணி

நொளம்பூர் : நொளம்பூரில் போதுமான அளவு குடிநீர் வினியோகம் இல்லாததால், மக்கள் தவித்து வருகின்றனர்.வளசரவாக்கம் மண்டலம் 143வது வார்டு நொளம்பூரில், வி.ஜி.என்., மான்டே கார்லோ காலனி உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

இப்பகுதிக்கு, சென்னை குடிநீர் வாரியம் சார்பில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.ஆனால், ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப் படுவதால், பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்கவில்லை என, குற்றச்சாட்டு உள்ளது.இதனால், கேன் வாட்டர் மற்றும் தனியார் லாரி தண்ணீர் காசு கொடுத்து வாங்கும் அவலநிலைக்கு குடியிருப்புவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, தினந்தோறும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை முன் வைத்துள்ளனர்.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:ஒரு மணி நேரம் வழங்கப்படும் குடிநீர் அளவு போதுமானதாக இல்லை. இது குறித்து குடிநீர் வாரியத்திற்கும், முதல்வர் தனிப் பிரிவிற்கும் புகார் அளித்தோம். ஆனால், எந்த பயனும் கிடைக்கவில்லை.எங்களை சுற்றி உள்ள முகப்பேர் கிழக்கு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில், தினமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எங்களுக்கும் போதிய குடிநீர் வினியோகம் செய்ய வாரியம் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X