பொது செய்தி

தமிழ்நாடு

குடியரசு தின விழா பேச்சுப்போட்டி

Added : நவ 15, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகத்தில் வரும் 30ம் தேதி பேச்சு போட்டி நடக்கிறது.மாவட்ட நேரு யுவ கேந்திரா இளையோர் அலுவலர் ராம்சந்திரன் செய்திக்குறிப்பு:குடியரசு தின விழாவையொட்டி, நேரு யுவக்கேந்திரா சார்பில் நாட்டுப்பற்று தலைப்பில் பேச்சு போட்டி நடத்தப்படுகிறது. விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நேரு யுவக்கேந்திரா அலுவலகத்தில்,

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகத்தில் வரும் 30ம் தேதி பேச்சு போட்டி நடக்கிறது.மாவட்ட நேரு யுவ கேந்திரா இளையோர் அலுவலர் ராம்சந்திரன் செய்திக்குறிப்பு:

குடியரசு தின விழாவையொட்டி, நேரு யுவக்கேந்திரா சார்பில் நாட்டுப்பற்று தலைப்பில் பேச்சு போட்டி நடத்தப்படுகிறது. விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நேரு யுவக்கேந்திரா அலுவலகத்தில், வரும் 30ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது.விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் நடைபெற உள்ள இப்போட்டியில், 2021 ஏப்ரல் 1ம் தேதி 18 வயது பூர்த்தியான 29 வயதுக்குட்பட்ட ஆண், பெண் கலந்து கொள்ளலாம்.மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்கள் மாநில அளவிலும், மாநில அளவில் முதலிடம் பெறுபவர்கள் தேசிய அளவிலும் பங்குபெறலாம். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு ரொக்க பரிசும், கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்

.இதற்கான விண்ணப்பத்தை வரும் 25ம் தேதிக்குள் பூர்த்தி செய்து, விழுப்புரம் மாவட்ட நேரு யுவக்கேந்திரா அலுவலகத்தில் வழங்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X