பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் ஆபத்து கட்டடங்கள்; இடிக்கும் பணி இழுத்தடிப்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் அரசு பள்ளிகளில் 'ஆபத்து' என கண்டறியப்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணியில் டி.ஆர்.டி.ஏ., மற்றும் பொதுப்பணித்துறை இழுத்தடிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலையில் 104 பள்ளிகளில் 175 வகுப்பறைகளும், உயர், மேல்நிலையில் 31 பள்ளிகளில் 74 வகுப்பறைகளும் 'பயன்படுத்த முடியாத ஆபத்தான கட்டடங்கள்' என கல்வித்துறையால்

மதுரை : மதுரையில் அரசு பள்ளிகளில் 'ஆபத்து' என கண்டறியப்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணியில் டி.ஆர்.டி.ஏ., மற்றும் பொதுப்பணித்துறை இழுத்தடிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலையில் 104 பள்ளிகளில் 175 வகுப்பறைகளும், உயர், மேல்நிலையில் 31 பள்ளிகளில் 74 வகுப்பறைகளும் 'பயன்படுத்த முடியாத ஆபத்தான கட்டடங்கள்' என கல்வித்துறையால் கண்டறியப்பட்டன.கொரோனாவால் மூடியிருந்த பள்ளிகள் நவ.,1 திறக்கும் முன் 'ஆபத்து வகுப்பறைகளை' இடிக்க டி.ஆர்.டி.ஏ., மற்றும் பொதுப் பணித்துறைக்கு கல்வித்துறை பரிந்துரை செய்தது. ஆனால் இடிக்கப்படவில்லை.தற்போது வடகிழக்கு பருவமழையும் துவங்கியுள்ளது.

பெரும்பாலான பள்ளிகளில் ஒரே வளாகத்தில் தற்போது மாணவர் பயன்படுத்தும் அறையும் அருகில் இந்த 'ஆபத்து' வகுப்பறையும் உள்ளன.முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறுகையில், “175 வகுப்பறைகள் டி.ஆர்.டி.ஏ.,விடமும், 74 வகுப்பறைகள் பொதுப்பணித்துறையிடமும் இடிக்க பரிந்துரைத்துள்ளோம். பொதுப்பணித்துறைக்கு மட்டும் கல்வித்துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. டி.ஆர்.டி.ஏ.,வில் நிதி ஒதுக்கப்பட்டதா என தெரியவில்லை. விரைவில் இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X