பொது செய்தி

தமிழ்நாடு

20 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

Updated : நவ 15, 2021 | Added : நவ 15, 2021
Share
Advertisement
சென்னை---கன்னியாகுமரி உட்பட 20 மாவட்டங்களில் இன்றும்; 16 மாவட்டங்களில் நாளையும் கன மழை பெய்யும் என எச்சரிக் கப்பட்டு உள்ளது.குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 18ம் தேதி ஆந்திர கடற்கரையை நெருங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக வட மாவட்டங்களில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால்

சென்னை---கன்னியாகுமரி உட்பட 20 மாவட்டங்களில் இன்றும்; 16 மாவட்டங்களில் நாளையும் கன மழை பெய்யும் என எச்சரிக் கப்பட்டு உள்ளது.



latest tamil news


குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 18ம் தேதி ஆந்திர கடற்கரையை நெருங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக வட மாவட்டங்களில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் இன்று மிக கன மழை பெய்யும்.

ஈரோடு, திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கோவை, சேலம், தர்மபுரி, கடலுார், அரியலுார், பெரம்பலுார், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும்.அதேபோல புதுச்சேரி, காரைக்கால் நகரங்களிலும் கன மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும்; மிதமான மழை பெய்யும். நாளை நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல், அரியலுார், பெரம்பலுார், கடலுார், தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி மற்றும் புத்தன் அணை பகுதிகளில் 22 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது. சுருளக்கோடு 14; பேச்சிப்பாறை, கன்னிமார், 11; மயிலாடி, தேன்கனிக்கோட்டை, 10; குழித்துறை, கிருஷ்ணகிரி, 9 செ.மீ., மழை பெய்துள்ளது.தக்கலை, பூதப்பாண்டி, நாகர்கோவில் 8; ஊத்தங்கரை, பென்னாகரம் 7; கொட்டாரம், சின்னக்கல்லார், வால்பாறை 6; சோலையாறு, ராதாபுரம், ஓமலுார், 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வுவங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அந்தமான் அருகில் நிலவுகிறது.


latest tamil news


இது, மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக, தென் கிழக்கு வங்கக் கடலில் மையம் கொள்ளும்.அதன்பின், வட மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலின் அருகே, நாளை மறுதினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். வரும் 18ம் தேதி ஆந்திராவின் தெற்கு கடற்கரையை நோக்கி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், மத்திய வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், 18 வரை சூறாவளி காற்று வீசும். கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகளில் இன்றும்; வட கர்நாடகா கடலோர பகுதிகள், மஹாராஷ்டிரா கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில், நாளை மறுதினம் வரையிலும் மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். எனவே, மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X