பொது செய்தி

தமிழ்நாடு

சேமிப்பு பணத்தில் உதவி; புளியந்தோப்பு சிறுமி தாராளம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
சென்னை : சைக்கிள் வாங்க சேமித்து வைத்த பணத்தை, 7 வயது சிறுமி மழையால் பாதிக்கப்பட்டோருக்கு கொடுத்து உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.புளியந்தோப்பு, குட்டி தம்பிரான் தெருவைச் சேர்ந்த காந்தி நாகராஜன் என்பவரின் மகள் ஜனனி, 7. இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.தனக்கு பெற்றோர், உறவினர்கள் கொடுத்த பணத்தை, உண்டியலில் சிறுக சிறுக
 சேமிப்பு பணத்தில் உதவி; புளியந்தோப்பு சிறுமி தாராளம்

சென்னை : சைக்கிள் வாங்க சேமித்து வைத்த பணத்தை, 7 வயது சிறுமி மழையால் பாதிக்கப்பட்டோருக்கு கொடுத்து உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

புளியந்தோப்பு, குட்டி தம்பிரான் தெருவைச் சேர்ந்த காந்தி நாகராஜன் என்பவரின் மகள் ஜனனி, 7. இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.தனக்கு பெற்றோர், உறவினர்கள் கொடுத்த பணத்தை, உண்டியலில் சிறுக சிறுக சேர்த்து வைத்தார்.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரை கண்ட ஜனனி, தான் சேமித்து வைத்திருந்த 5,000 ரூபாயில் அத்தியாவசிய பொருட்களான, பால் பாக்கெட், பிரெட் உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்தார். இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X