மதுரை : வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை செம்மையாக மேற்கொள்ள வேண்டும் என மதுரையில் நடந்த வாக்காளர் பதிவு அலுவலர்கள் கூட்டத்தில் அரசு பார்வையாளர் தட்சிணாமூர்த்தி அறிவுறுத்தினார்.
இம்மாவட்டத்தில் நேற்று 2வது நாளாக அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடந்தது.உசிலம்பட்டி பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி, செக்கானுாரணி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, மதுரை மேற்கு ஜான் மெட்ரிகுலேஷன் பள்ளி ஓட்டுச்சாவடிகளில் நடந்த இப்பணிகளை பார்வையாளர் ஆய்வு செய்தார். பின் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். கலெக்டர் அனீஷ்சேகர், மாவட்ட வருவாய் அதிகாரி செந்தில்குமாரி, ஆர்.டி.ஓ., சுகி பிரேம்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாம்களில் பெற்ற மனுக்களை பரிசீலித்து தகுதியானவர்களை பட்டியலில் சேர்க்கவும், இரட்டை பதிவுகள் இருப்பதை கண்டறிந்து நீக்கவும் பார்வையாளர் அறிவுறுத்தினார்.நவ., 13, 14 ல் நடந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய 21,743 மனுக்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE