பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் குழந்தைகள் தின விழா

Added : நவ 15, 2021
Share
Advertisement
மதுரை :மதுரை புதுார் மேரிஆன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் குழந்தைகள்தினவிழா முதல்வர் குளோரியா தலைமையில் நடந்தது.தாளாளர் ரெஜினா பேசினார். மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. துணை முதல்வர் டேவிட் தலைமையில் உணவு திருவிழா மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.* மதுரை திருஞானம் துவக்க பள்ளியில் தெற்கு

மதுரை :மதுரை புதுார் மேரிஆன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் குழந்தைகள்தினவிழா முதல்வர் குளோரியா தலைமையில் நடந்தது.தாளாளர் ரெஜினா பேசினார். மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. துணை முதல்வர் டேவிட் தலைமையில் உணவு திருவிழா மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

* மதுரை திருஞானம் துவக்க பள்ளியில் தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு தலைவர் கணேசன் தலைமை வகித்தார். ஆசிரியை உஷா தேவி வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆனந்தவள்ளி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சரவணன் பேசினார். பள்ளி துணை தலைவர் மலர்விழி, சங்க நிர்வாகி பிரபு, பிரசன்னா உள்ளிட்டோர் பேசினர். ஆசிரியை சுமதி நன்றி கூறினார்.

டி.கல்லுப்பட்டிடி.கல்லுப்பட்டி குழந்தைகள் காப்பகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன் தலைமையில் குழந்தைகள் தின விழா நடந்தது.குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா பங்கேற்றார். கலைநிகழ்ச்சிகள் நடந்தன. சமூகபணியாளர் அருள்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இல்ல கண்காணிப்பாளர் ஞானபால் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X