மழையில் பிளக்ஸ் கட்டி உடலை எரிக்கும் அவலம்| Dinamalar

மழையில் பிளக்ஸ் கட்டி உடலை எரிக்கும் அவலம்

Added : நவ 15, 2021
Share
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் ஒன்றியம் கொண்டையம்பட்டியில் 200 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்கள் உள்ளன. இக்கிராம பொது மற்றும் ஆதிதிராவிட மயானங்களில் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. ஆதிதிராவிட மக்களுக்குரிய மயானத்திற்கு 40 சென்ட் வரை ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிப்பால் 20 சென்ட் ஆக குறைந்து விட்டது. இறந்தவர்களை எரிக்க எரிமேடையோ, தகர செட்டோ இல்லை. மழை

அலங்காநல்லுார் :
அலங்காநல்லுார் ஒன்றியம் கொண்டையம்பட்டியில் 200 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்கள் உள்ளன. இக்கிராம பொது மற்றும் ஆதிதிராவிட மயானங்களில் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

ஆதிதிராவிட மக்களுக்குரிய மயானத்திற்கு 40 சென்ட் வரை ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிப்பால் 20 சென்ட் ஆக குறைந்து விட்டது. இறந்தவர்களை எரிக்க எரிமேடையோ, தகர செட்டோ இல்லை. மழை நேரங்களில் 4 மரங்களில் 'பிளக்ஸ்' கட்டி எரிக்கும் நிலை உள்ளதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர்.ஊராட்சி தலைவர் மலைச்சாமி கூறியதாவது: மயானத்தில் தண்ணீர் வசதிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் தகர செட் அமைக்கப்படும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X