50 சதவீதம் மானியத்தில் நெல் விதைகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

50 சதவீதம் மானியத்தில் நெல் விதைகள்

Added : நவ 15, 2021
Share
வாடிப்பட்டி : வாடிப்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குனர் வாசுகி கூறியதாவது: வாடிப்பட்டி வட்டாரத்தில் பெரியாறு, வைகை பாசனத்தில் இரு போக நெல் சாகுபடி துவங்கியுள்ளது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் கோ 51 நெல் விதைகள் 10 மெட்ரிக் டன் அளவு, வெள்ளைப் பொன்னி ஒரு டன் இருப்பு உள்ளது. திரவ உயிர் உரங்கள், நெல் நுண்ணுாட்ட உரங்கள் வாடிப்பட்டி வேளாண்

வாடிப்பட்டி : வாடிப்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குனர் வாசுகி கூறியதாவது: வாடிப்பட்டி வட்டாரத்தில் பெரியாறு, வைகை பாசனத்தில் இரு போக நெல் சாகுபடி துவங்கியுள்ளது.

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் கோ 51 நெல் விதைகள் 10 மெட்ரிக் டன் அளவு, வெள்ளைப் பொன்னி ஒரு டன் இருப்பு உள்ளது. திரவ உயிர் உரங்கள், நெல் நுண்ணுாட்ட உரங்கள் வாடிப்பட்டி வேளாண் விரிவாக்க மையம் மற்றும் சோழவந்தான் துணை மையத்தில் விவசாயிகளுக்கு வழங்க போதிய இருப்பு உள்ளது. அட்மா திட்டத்தில் தென்னை மரம் ஏறும் கருவியும் மானியத்தில் வழங்கப்படுகிறது என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X